இந்தியாவிற்கு எதிரான இன்றைய போட்டியில் இரட்டை சாதனை புரியவுள்ள – கெயில்

chris-gayle
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய அணி தற்போது டி20 தொடரை 3 – 0 என்ற கணக்கில் கைப்பற்றியது. அதனைத் தொடர்ந்து இன்று மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி விளையாட இருக்கிறது.

gayle

- Advertisement -

இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் வீரரான கெயில் இன்று இரண்டு முக்கியமான சாதனைகளை படைக்க உள்ளார். அவை யாதெனில் வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பாக அதிக ஒருநாள் போட்டியில் பங்கேற்ற வீரர் என்ற சாதனையை தன்வசம் வைத்துள்ள லாராவை முந்தி அவர் இன்று கடந்து செல்கிறார்.

இதுவரை 295 போட்டிகளில் விளையாடிய லாரா அதிக போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற பெருமை வைத்திருந்தார். இன்றைய போட்டியில் கெயில் விளையாடினால் அது அவருடைய 296 ஆவது போட்டியாக அமையும்.

gayle

மேலும் அதன் பிறகு ஒருநாள் போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் சார்பாக அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையை தன்வசம் வைத்திருக்கும் லாரா 10348 ரன்கள் எடுத்துள்ளார். இன்று கெயில் 11 ரன்கள் அடிக்கும் பட்சத்தில் லாராவின் கடந்து செல்வார். இதுவரை 295 போட்டிகளில் விளையாடியுள்ள கெயில் 10338 ரன்கள் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement