41 வயதிலும் முழுத்திறமையால் கெயிலுக்கு அடித்த அதிர்ஷ்டம் – 2 வருடத்திற்கு பிறகு கிடைச்ச சேன்ஸ்

Gayle

இலங்கை கிரிக்கெட் அணி தற்போது வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்த அணிக்கு எதிராக 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடர் மற்றும் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. இந்த டி20 தொடரானது மார்ச் 3ஆம் தேதி தொடங்கி மார்ச் 7ஆம் தேதி வரை நடைபெற உள்ளன. இந்த மூன்று போட்டிகளுக்கான டி20 வெஸ்ட் இண்டீஸ் அணியை தற்போது அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

Wi-3

அதில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் அனுபவ வீரரான கிறிஸ் கெய்ல் சேர்க்கப்பட்டுள்ளார். 14 பேர் கொண்ட வெஸ்ட் இண்டீஸ் அணியில் 41 வயதான கிரிஸ் கெயில் சேர்க்கப்பட்டுள்ளது அனைவரையும் கவர்ந்துள்ளது. ஏனெனில் ஏற்கனவே வயது மூப்பின் காரணமாக அணியில் இருந்து ஒதுக்கப்பட்ட கெயில் கடைசியாக விளையாடி இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது.

இந்நிலையில் மீண்டும் தேசிய அணிக்காக அவர் விளையாட இருப்பது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஐபிஎல் தொடர் மற்றும் பாகிஸ்தான் டி20 லீக் ஆகியவற்றில் சிறப்பாக விளையாடி உள்ள அவரது திறமையின் அடிப்படையில் மீண்டும் இரண்டு ஆண்டுகள் கழித்து தேசிய அணிக்காக விளையாட இருக்கிறார்.

gayle 2

இதேபோன்று மூத்த வேகப்பந்து வீச்சாளரான பிடல் எட்வர்ட்ஸ் 9 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அணியில் இணைந்து விளையாட இருக்கிறார். இவர்கள் இருவரது சேர்க்கை அனைவரையும் ஆச்சரியமடைய வைத்துள்ளது. 41 வயது ஆனாலும் இன்றும் டி20 போட்டிகளில் அசத்தி வரும் கெயில் இந்த தொடரிலும் சிக்ஸர் மழை பொழிந்து அதிரடி காட்டுவார் என நம்பலாம்.

- Advertisement -

gayle

1999 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார் கிறிஸ் கெயில். இதுவரை மொத்தம் 103 டெஸ்ட், 301 ஒரு நாள் போட்டி, 58 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.