MS Dhoni : தோனிக்கு முன்பே நானும் இதனை ஐ.சி.சி-யிடம் முறையிட்டேன் – கெயில்

தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக இந்திய அணி விளையாடிய போட்டியில் இந்திய அணியின் விக்கெட் கீப்பரான தோனி தனது கீப்பிங் கிளவுஸில் பாலிதான் முத்திரையை பதித்து விளையாடி

gayle
- Advertisement -

தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக இந்திய அணி விளையாடிய போட்டியில் இந்திய அணியின் விக்கெட் கீப்பரான தோனி தனது கீப்பிங் கிளவுஸில் பாலிதான் முத்திரையை பதித்து விளையாடினார். இந்த விடயம் உலகஅளவில் பேசப்பட்டு சர்ச்சைக்கு உண்டான விடயமாக மாறியது.

dhoni

இதனை கவனித்த ஐசிசி சர்வதேசப் போட்டிகளின் போது தனிநபர் சார்ந்த மதம், அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த எந்த ஒரு விடயத்தை குறிக்கும் எந்த ஒரு குறியீடுகளையும் போட்டிகளில் பயன்படுத்தும் பொருட்களில் புகுத்தக் கூடாது என்பதனை கூறி தோனிக்கு அறிவுரை வழங்கியது அதனைத் தொடர்ந்து தோனியும் அதனை ஏற்றுக்கொண்டார்.

- Advertisement -

ற்போது தோனிக்கு முன்பே அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி வெளியான தகவல் யாதெனில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரரான கிறிஸ் கெயில் இந்த உலக கோப்பை தொடர் முடிந்ததும் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வுபெற இருப்பதால் அவர் தனது பேட்டில் யுனிவர்சல் பாஸ் என்ற வாசகத்தை பதிவிட்டு விளையாட ஐசிசியிடம் உரிமை கோரி இருந்தார்.

gayle

ஆனால் இதற்கு ஐசிசி அனுமதி வழங்கவில்லை. அதற்கு காரணம் யாதெனில் தனிநபர் சார்ந்த எந்த ஒரு பதிவும் சர்வதேசப் போட்டிகளில் பிரதிபலிக்க கூடாது என்பதாகும். இந்த விடயம் தற்போது விவாதத்திற்குரிய செய்தியாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement