இந்த ஒரு மாற்றத்தை கொண்டுவாருங்கள். இந்திய அணி வேற லெவலுக்கு செல்லும் – கவாஸ்கர் கோரிக்கை

Sunil-gavaskar
- Advertisement -

பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலிக்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் ஜாம்பவான் வீரருமான சுனில் கவாஸ்கர் புதிய கோரிக்கை வைத்துள்ளார். சமீபத்தில் இந்திய மகளிர் அணி ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டி வரை முன்னேறியது. ஆனால் இறுதிப் போட்டியில் எந்த ஒரு போராட்டமுமின்றி ஆஸ்திரேலியாவிடம் படுமோசமாக தோல்வியடைந்து கோப்பையை இழந்தது.

aus w

- Advertisement -

இருந்தாலும் முதல் முறையாக இந்திய மகளிர் அணி இறுதிப்போட்டிக்கு சென்றதற்கான இன்றைய ரசிகர்களும் முன்னாள் வீரர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்திய மகளிர் கிரிக்கெட் மேம்படுத்த கவாஸ்கர் கங்குலியிடம் ஒரு கோரிக்கை யை வைத்துள்ளார்.

இது குறித்து பேசியுள்ள கவாஸ்கர் கூறியதாவது :மகளிர் கிரிக்கெட்டிற்கு முக்கியத்துவம் கொடுத்து பிசிசிஐ பல முக்கிய மாற்றங்களை எடுத்து வருகிறது. கடந்த சில வருடங்களாக எடுத்த மாற்றத்தின் விளைவு தான் இன்று இறுதிப்போட்டி உலக கோப்பை தொடர் துவங்கும் முன்பே ஒரு மாதத்திற்கு முன்பே இந்திய அணி ஆஸ்திரேலியா சென்று முத்தரப்பு தொடரில் விளையாடியது.

இதனால் ஆடுகளத்தின் தன்மை சூழ்நிலை ஆகியவற்றை வெகு எளிதாக புரிந்து கொண்டு ஆடி இறுதிப்போட்டி வரை முன்னேற முடிந்தது. கங்குலிக்கு பிசிசிஐக்கு நான் ஒரு கோரிக்கை வைக்கிறேன்.

- Advertisement -

அடுத்த ஆண்டு முதல் மகளிர்க்கான ஐபிஎல் தொடரை நடத்த நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். மகளிர் ஐபிஎல் தொடர் நடத்துவதன் மூலம் நிறைய திறமைசாலிகளை கண்டறியமுடியும். ஆஸ்திரேலியாவில் மகளிருக்கான டி20 லீக் கோப்பை நடத்தப்படுகிறது.

Womens

ஏற்கனவே நம் இந்திய வீராங்கனைகள் சிலர் அங்கு ஆடி வருகின்றனர். அதே போல் இங்கும் நடத்தினால் மகளிர் கிரிக்கெட் முன்னேறும் என்று கூறியுள்ளார் சுனில் கவாஸ்கர். எனவே இந்த கருத்தினை ஏற்று கங்குலி நடவடிக்கை எடுப்பார் என்று எதிர்பார்க்கிறேன் என்று கவாஸ்கர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement