தற்போதுள்ள வீரர்களில் நான் இவரைப்போன்றே அதிரடியாக விளையாட ஆசைப்படுகிறேன் – கவாஸ்கர் விருப்பம்

Gavaskar
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவானும், தற்போதைய கிரிக்கெட் வர்ணனையாளருமான சுனில் கவாஸ்கர் இந்திய அணியின் ஆஸ்தான பேட்ஸ்மேன் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் தற்போது கிரிக்கெட் விளையாடி இருந்தால் எந்த வீரரைப் போல் விளையாட ஆசைப்படுகிறேன் என்ற தனது கருத்தினை அவர் ரசிகர்களுக்காக தனது சமூக வலைதளப் பக்கத்தில் மூலமாக பகிர்ந்து கொண்டார்.

gavaskar

- Advertisement -

அந்தவகையில் அவர் கூறியதாவது : நான் கிரிக்கெட் விளையாடிய காலத்தில் என்னுடன் விளையாடிய சக கிரிக்கெட் வீரர்கள் தற்போது டி20 கிரிக்கெட்டை அதிகம் விரும்புவதில்லை. போட்டி 3 மணி நேரத்தில் முடிந்துவிடும் என்பதால் அவர்களுக்கு இதில் விருப்பம் இல்லாமல் போனது .ஆனால் எனக்கு டி20 கிரிக்கெட் போட்டிகள் மிகவும் பிடிக்கும். இந்த மூன்று மணி நேரத்தில் அணியில் உள்ள வீரர்கள் அனைவரும் தங்களது திறமையை நிரூபித்தாக வேண்டும்.

ஆட்டம் எப்போது எந்தப் பக்கம் வேண்டுமானாலும் திரும்பலாம் அதுவே டி20 போட்டியில் உள்ள மிகப்பெரிய சுவாரசியம் என்று கூறினார். அவர் தொடர்ந்து கூறுகையில் : ஐபிஎல் தொடரில் நான் வர்ணனை செய்யும் பொழுது டிவில்லியர்ஸ் விளையாடும் ஆட்டத்தை பார்க்க எனக்கு மிகவும் பிடிக்கும். எனவே அவரைப் போல் டி20 கிரிக்கெட் போட்டிகளில் பேட்டிங் செய்ய தான் ஆசைப்படுவதாக கவாஸ்கர் பகிர்ந்து கொண்டார்.

மேலும் அது குறித்து அவர் கூறுகையில் : டிவில்லியர்ஸ் களத்தில் இருக்கும்போது பந்தை எங்கு வேண்டுமானாலும் அடிப்பார். அதனாலேயே அவருக்கு 360 டிகிரி என்ற பெயரும் கிடைத்துள்ளது. ப்ராப்பர் கிரிக்கெட் ஷாட்டுகள் மட்டுமின்றி ஸ்வீப் ஷாட்டுகள், ஸ்விட்ச் ஷாட்டுகள் என அனைத்து விதமான ஷாட்களையும் அவர் விளையாடுவார் எனவே தற்போதைக்கு டி20 போட்டிகளில் ஒருவேளை நான் விளையாடி இருந்தால் அவரைப் போன்றே விளையாட தான் ஆசைப்படுவதாக கூறியுள்ளார்.

Gavaskar

தற்போது இந்திய அணி இங்கிலாந்து சென்று இருக்கும் இவ்வேளையில் கவாஸ்கரும் இங்கிலாந்து சென்றுள்ளார். ஏனெனில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை தொகுத்து வழங்கும் வர்ணனையாளராக அவர் செயல்பட இருப்பது குறிப்பிடத்தக்கது. அவரோடு சேர்ந்து பணியாற்ற தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்கும் இங்கிலாந்து சென்று உள்ளார் என்பது கூடுதல் சிறப்பம்சம்.

Advertisement