இங்கிலாந்து தொடரில் சுப்மன் கில்லுக்கு பதிலாக இவரே விளையாடனும் – கவாஸ்கர் ஓபன்டாக்

Gavaskar
- Advertisement -

ஐசிசி நடத்திய டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்துள்ளதால் எதிர்வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றியே தீரவேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறது இந்திய அணி. எனவே இங்கிலாந்து தொடரில் அணியில் சில மாற்றங்களை ஏற்படுத்த தேர்வுக் குழு முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது. இந்நிலையில் இங்கிலாந்து தொடர் குறித்து கருத்து கூறியிருக்கும் இந்திய அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர், இரு போட்டிகளில் மட்டுமே சிறப்பாக விளையாடததால் அணியில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கும் வீரர் ஒருவருக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்ற அறிவுரையை பிசிசிஐக்கு வழங்கியுள்ளார்.

gill 2

- Advertisement -

இந்திய டெஸ்ட் அணியில் இடம் பிடித்ததில் இருந்தே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த மாயங்க் அகர்வால், கடந்த ஆண்டு நடைபெற்ற ஆஸ்திரேலிய தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் சோபிக்க தவறினார். அதனையடுத்து இந்திய அணிக்காக ஓப்பனிங் விளையாடும் வாய்ப்பு இளம் வீரரான சுப்மன் கில்லுக்கு சென்றது. அந்த தொடரில் சிறப்பாக விளையாடிய கில், அதற்கடுத்து நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் அரை சதமடித்து அசத்தியருந்தாலும் அதற்குப் பிறகான எந்த போட்டியிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை.

தற்போது நடைபெற்று முடிந்துள்ள இறுதிப் போட்டியிலும் அவர், பெரிய அளவிலான ஃபர்மான்சை வெளிப்படுத்த முடியாமல் திணறினார். குறிப்பாக அவருடைய புட் ஒர்க் இங்கிலாந்தில் சுத்தமாக எடுபடவில்லை. இதைக் குறிப்பிட்டு பேசிய சுனில் கவாஸ்கர் கூறியதாவது, சுப்மன் கில்லின் ஃபுட் ஒர்க் சுத்தமாக சரியில்லை. இந்த இறுதிப் போட்டியில் மட்டும் அவர் அப்படி விளையாடவில்லை, இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் இதேபோல்தான் அவர் விளையாடினார். குறிப்பாக பந்து வீச்சாளர்கள் வீசும் லென்த்திற்கு ஏற்ப தனது ஃபுட் ஒர்க்கை அமைக்க தவறும் அவர் தேவையே இல்லாத ஷாட்களை ஆடி அவுட்டாகிறார்.

gill 1

அவருக்குப் பதிலாக மயாங்க் அகர்வாலை ஓப்பனிங் பேட்ஸ்மேனாக தேர்ந்தெடுக்கும் முடிவைப் பற்றி பிசிசிஐயும், அதன் செயலாளருமான ஜெய் ஷாவும் யோசிக்க வேண்டும். இரு போட்டிகளில் சிறப்பாக விளையாடாத காரணத்தால் அவரை தொடர்ந்து வெளியிலேயே அமர வைக்க கூடாது என்று கூறிய அவர் இங்கிலாந்து தொடருக்கான அணியில் அவரை விளையாட வைக்கவேண்டும் என்றும் கூறினார். இதுகுறித்து பேசிய அவர்,

Agarwal 1

இருவருமே நன்றாக விளையாடினால் அது இந்திய அணிக்கு தான் பெரிய பலம். தற்போது கில் காயம் காரணமாக வெளியேறியுள்ளதால் அவருக்கு பதிலாக அகர்வாலை விளையாட வைக்கலாம். ஒருவேளை வருங்காலத்தில் ரோஹித் சர்மாவிற்கு ஓய்வு தேவைப்படும்போது இந்த இருவரையுமே ஓப்பனிங் பேட்ஸ்மேன்களாக களமிறக்கி விடலாம் என்றும் அவர் கூறியுள்ளார். இங்கிலாந்து அணிக்கான எதிரான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் ஆகஸ்ட் மாதம் 4 ஆம் தேதி தொடங்கவிருக்கிறது.

Advertisement