
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 56-வது லீக் போட்டியில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணியானது சொந்த மண்ணில் மூன்று விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அந்த அணியிடம் தோல்வியை சந்தித்தது. இந்த போட்டிக்கு முன்னதாக தொடர்ச்சியாக 7 வெற்றிகளை பெற்று வீறுநடை போட்டு வந்த மும்பை இந்தியன்ஸ் அணியின் வெற்றி நடையை நேற்று குஜராத் அணி தடுத்து நிறுத்தியது.
அந்த வகையில் நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்கள் குவிக்க பின்னர் 156 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி விளையாடிய போது மழை பெய்ததின் காரணமாக ஆட்டம் 19 ஓவர்களுக்கு குறைக்கப்பட்டது.
பின்னர் 19 ஓவருக்கு 147 ரன்கள் அடித்தால் வெற்றி என்று இலக்கு மாற்றி அமைக்கப்பட்டது. இந்த போட்டியின் கடைசி ஓவரில் வெற்றிக்கு 15 ரன்கள் தேவை என்கிற நிலையில் மும்பை அணியின் கையே ஓங்கியிருந்தது. ஆனால் கடைசி ஓவரினை ஹார்டிக் பாண்டியா வீசாமல் தீபக் சாகர் வீசியதால் மும்பை இந்தியன்ஸ் அணி தோல்வியை சந்தித்தது.
இந்நிலையில் நேற்றைய போட்டியில் மும்பை அணி தோல்வி அடைந்ததற்கு முழுக்க முழுக்க காரணமே பாண்டியா தான் என முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர் விமர்சித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : நேற்றைய போட்டியில் பாண்டியா வீசிய முதல் ஓவரில் 11 பந்துகளை வீசி 18 ரன்களை விட்டுக் கொடுத்திருந்தார்.
அதேபோன்று பேட்டிங்கிலும் மோசமான ஷாட்டை வெளிப்படுத்தி ஆட்டமிழந்தார். அதோடு போட்டியின் முடிவை தீர்மானிக்கக்கூடிய கடைசி ஓவரை தானாக முன்வந்து வீசாமல் இதுவரை கடைசி ஓவரை வீசாத தீபக் சாஹரை வீசவைத்தார். இப்படி முழுக்க முழுக்க பாண்டியா எடுத்த தவறான முடிவுகளால் தான் அந்த அணி தோல்வியை சந்தித்துள்ளது.
இதையும் படிங்க : இந்த வருஷம் என்னோட ஐ.பி.எல் பவுலிங் பார்ம் ரொம்ப சுமாரா இருக்க இதுதான் காரணம் – ரஷீத் கான் பேட்டி
கடைசி ஓவரை தீபக் சாஹர் வீசியிருக்கக்கூடாது. பலமுறை கடைசி ஓவரை வீசிய அனுபவமுடைய ஹார்டிக் பாண்டியா தான் வீசியிருக்க வேண்டும். இப்படி பாண்டியா தெரிஞ்சே தவறுகளால்தான் அந்த அணி தோல்வியை சந்தித்தது என சுனில் கவாஸ்கர் கடுமையாக விமர்சித்துள்ளது குறிப்பிடத்தக்கது.