இந்த உலககோப்பையில் இந்திய அணியின் பெயிலியருக்கு 2 முக்கிய காரணங்கள் இதுதான் – கவாஸ்கர் பளீர்

Gavaskar
- Advertisement -

இந்த உலகக்கோப்பை தொடரின் அரையிறுதிக்கு தகுதி பெறுவோம் என்ற இந்திய அணியின் கனவு நேற்றோடு முடிவுக்கு வந்தது. நேற்று நடைபெற்ற ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து அணி எளிதாக வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தது. அதனால் இன்று இந்திய அணி நமீபியா அணிக்கு எதிரான போட்டியில் எவ்வளவு பெரிய வெற்றி பெற்றாலும் அது சம்பிரதாய போட்டியாகவே அமையும். இந்நிலையில் இந்திய அணியின் இந்த சொதப்பலுக்கு பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் இந்த தொடரில் இந்திய அணியின் செயல்பாடு குறித்து பேட்டியளித்துள்ளார்.

Williamson

மேலும் இந்த தொடரில் இந்திய அணி சொதப்பியதற்கு இரண்டு முக்கியமான காரணங்களையும் அவர் வெளிப்படையாக கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : இந்திய அணியின் இந்த சொதப்பலுக்கு முதல் காரணம் பேட்ஸ்மேன்கள் பவர்பிளே பவர்களில் செய்யும் தவறுகளே காரணமாக அமைகிறது. ஏனெனில் ஐசிசி போன்ற பெரிய தொடர்களில் பெரிய அணிகளுக்கு எதிராக இந்திய அணி விளையாடும் போது முதல் ஆறு ஓவர்களிலேயே சறுக்கலை சந்திக்கிறது.

- Advertisement -

இதன் காரணமாக பின்வரும் வீரர்களால் சரியாக விளையாட முடியாமல் போகிறது. அதுமட்டுமின்றி பந்து வீச்சாளர்களும் இலக்கு பெரியதாக இல்லாமல் பந்துவீச கஷ்டப்படுகின்றனர். அதே போன்று ஓரிரு போட்டிகளில் பேட்ஸ்மேன்கள் சரியாக விளையாடவில்லை என்றால் அணியில் பெரிய அளவில் மாற்றம் செய்வதும் அணிக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. பெரிய பெரிய அணிகளுக்கு எதிராக இந்திய அணி விளையாடும் போது முதல் 6 ஓவர்களில் அதிக ரன் குவிக்க வேண்டும் என்று நினைத்து விக்கெட்டுகளை இழந்து விடுகிறது.

Rahul-1

அது மட்டுமின்றி நல்ல பவுலர்கள் இருக்கும் அணிகளுக்கு எதிராக இந்திய அணி துவக்கத்தில் ரன் குவிக்க தடுமாறுவதால் அதுவும் தோல்விக்கு ஒரு காரணம் அமைகிறது. இரண்டாவதாக இந்திய அணியின் சொதப்பலுக்கு பீல்டிங்கும் ஒரு காரணமாக அமைகிறது. என்னதான் இந்திய அணியின் வீரர்கள் தற்போது பிட்டாக இருந்தாலும் பீல்டிங்கில் குறிப்பிட்ட சில வீரர்களே சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர், மற்றபடி பெரிய அளவில் பீல்டிங் சிறப்பாக இல்லை.

- Advertisement -

இதையும் படிங்க : டி20 உலகக்கோப்பை : அரையிறுதியில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறப்போகும் – 2 அணிகள் இதுதான்

நியூசிலாந்து அணியை பொறுத்தவரை பீல்டிங்கில் அனைவரும் சிறப்பாக ரன்களை சேமிக்கிறார்கள், கேட்சிகளை சரியாக பிடிக்கின்றனர். பவுண்டரிகளை அற்புதமாக தடுக்கின்றனர். இதனால்தான் அவர்கள் நல்ல அணியாக இருக்கின்றனர் என்று இந்திய அணியின் இரண்டு குறைகளை கவாஸ்கர் சுட்டி காண்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement