2013 ஆம் ஆண்டிலிருந்து இந்திய அணி ஐ.சி.சி தொடர்களில் வெற்றிபெறாமல் இருப்பதற்கு இதுவே காரணம் – கவாஸ்கர் பேட்டி

- Advertisement -

இந்திய அணி கடைசியாக 2013ம் ஆண்டு மகேந்திர சிங் தோனி தலைமையில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கைப்பற்றியது. அதன்பிறகு நடைபெற்ற எந்த ஒரு ஐசிசி தொடரிலும் இந்திய அணி இறுதிப் போட்டி வரை முன்னேறினாலும் வெற்றி பெற்றது கிடையாது. இதன் காரணமாக விராட் கோலி தலைமையிலான இந்திய அணி தற்போது அழுத்தத்தை சந்தித்துள்ளது. ஏனெனில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் தோல்வியடைந்த இந்திய அணி கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

kohli 1

- Advertisement -

மேலும் ஐசிசி தொடரில் எப்போதும் சிறப்பாக விளையாடி வரும் இந்திய அணி இறுதிப் போட்டியில் மட்டும் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி தோல்வி அடைந்து வருவதால் தற்போது அழுத்தத்தில் உள்ளது. இந்நிலையில் தற்போது இந்திய அணியின் முன்னாள் வீரரும் வர்ணனையாளருமான சுனில் கவாஸ்கர் இந்திய அணி ஐசிசி தொடர்களில் தொடர்ச்சியாக தோல்வி பெறுவது ஏன் என்பது குறித்து தனது கருத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் : இந்திய அணி எப்போதும் சிறப்பாக விளையாடக் கூடிய ஒரு அணி தான் இருந்தாலும் ஐசிசி தொடர்களில் தோல்வி அடைவது சற்று வருத்தமளிக்கிறது. இங்கிலாந்து மைதானத்தில் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் நிச்சயம் நியூசிலாந்து அணிக்கு தான் சாதகம் அதிகம், ஏனெனில் மைதானத்தில் நல்ல ஸ்விங் இருப்பதன் காரணமாக அந்த அணியின் பந்துவீச்சாளர்கள் மைதானத்தை சரியாக கணித்து செயல்பட்டார்கள்.

Southee-2

இதுவும் நியூசிலாந்து அணி தொடரை கைப்பற்ற ஒரு முக்கிய காரணமாக அமைந்தது என்று கூறினார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் :கடைசி சில போட்டிகளை நாம் பார்க்கையில் மனதளவில் இந்திய அணி ஐசிசி தொடரின் இறுதிப் போட்டிகளில் விளையாடும் பொழுது சற்று நம்பிக்கை இழந்து காணப்படுகிறது. எனவே இறுதிப் போட்டியில் ஐசிசி தொடர்களில் வெற்றி பெற முடியவில்லையே என்ற மன அழுத்தம் தான் இந்திய அணியின் தோல்விக்கு ஒரு காரணமாக அமைகிறது.

IND

இந்த விடயமே தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியிலும் இந்திய அணிக்கு நடந்தது. இந்த இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு அதிக சாதகம் என்று பலரும் கூறி வந்த நிலையில் அந்த மன அழுத்தம் காரணமாகவே கடைசி போட்டியில் இந்திய அணியில் சிறப்பாக செயல்பட முடியாமல் போனது என அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement