எனக்கு 20 நிமிஷம் கெடைச்சா போதும் எல்லாம் சரியாகிடும். விராட் கோலி குறித்து பேசிய – சுனில் கவாஸ்கர்

Gavaskar-and-Kohli
- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், முன்னணி வீரருமான விராட் கோலி கடைசியாக 2019 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் சதம் அடித்தார். அதனை தொடர்ந்து தற்போது வரை 78 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் இதுவரை சதம் அடிக்காமல் தவித்து வருகிறார். மேலும் நாளுக்கு நாள் அவரது பேட்டிங் பார்ம் மோசமாகி வருவது ரசிகர்கள் மத்தியில் பெரிய கவலையை ஏற்படுத்தி உள்ளது. அதுமட்டுமின்றி நடைபெற்று முடிந்த இங்கிலாந்து தொடர் அவருக்கு மறக்கக்கூடிய ஒரு தொடராக மாறியுள்ளது.

kohli

- Advertisement -

ஏனெனில் இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் மற்றும் டி20 தொடர், ஒருநாள் தொடர் என அனைத்திலுமே விராட் கோலி சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்து வெளியேறியுள்ளார். குறிப்பாக இந்த தொடர் முழுவதுமே அவர் அதிகபட்சமாக 20 ரன்களை கூட தாண்டவில்லை. இதன் காரணமாக தற்போது விராட் கோலியின் மீது ஏகப்பட்ட விமர்சனங்கள் எழுந்துள்ளன.

அதோடு இந்த இங்கிலாந்து தொடரை முடித்த கையோடு இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட இருக்கிறது. இந்த தொடரில் இந்திய அணியில் விராட் கோலிக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை அவருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படி மோசமான ஃபார்மில் சிக்கி தவிக்கும் விராட் கோலிக்கு ஆதரவாக பலர் தங்களது கருத்துக்களை வெளிப்படுத்தி வரும் வேளையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கரும் தற்போது விராட் கோலியின் பார்ம் குறித்து சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.

Kohli

இதுகுறித்து அவர் கூறுகையில் : எனக்கு மட்டும் 20 நிமிடம் அவருடன் பேச நேரம் கிடைத்தால் நிச்சயம் விராட் கோலி இந்த சரிவிலிருந்து மீட்டெடுக்க உதவி புரிவேன். மேலும் அவர் ஆப் ஸ்டம்பில் வரும் பந்துகளில் தொடர்ச்சியாக ஆட்டம் இழந்து வருவது குறித்தும் நிறைய பேசுவேன். ஏனெனில் ஒரு பேட்ஸ்மேன் தொடர்ச்சியாக ஒரே வகையான பந்தில் ஆட்டமிஷக்கும் போது அடுத்த முறை அந்த மாதிரியான பந்தை விளையாட பயப்படுவார்கள். ஆனால் அப்படி நினைப்பதுதான் நாம் செய்யும் முதல் தவறு.

- Advertisement -

விராட் கோலி ஆப் ஸ்டம்ப் திசையில் வரும் பந்துகளை நன்றாக அடித்து விளையாட கூடியவர். சமீப காலமாகவே அவர் பார்ம் அவுட்டின் காரணமாக அந்த பந்துகளை தொட பயப்படுகிறார். இப்படி விளையாடுவது சரி கிடையாது என்னை பொருத்தவரை நான் அவரிடம் 20 நிமிடங்கள் அமர்ந்து பேசுகையில் அவரது சின்ன சின்ன தவறுகளை சரி செய்து ஊக்கப்படுத்தும் வகையில் பேசினால் நிச்சயம் விராட் கோலி இந்த சரிவிலிருந்து மீண்டு வந்து பழைய மாதிரி சிறப்பாக விளையாட முடியும்.

இதையும் படிங்க : 2017, 2021 உலகக்கோப்பையில் பாகிஸ்தானிடம் அடிவாங்கியும் இன்னும் முன்னேறல – இந்தியா மீது நாசர் ஹுசைன் விமர்சனம்

மேலும் ஒரு குறிப்பிட்ட வகையான பந்துகளில் தொடர்ச்சியாக ஒருவர் ஆட்டம் இழந்தால் அந்த பந்துகளை அடிக்காமல் விடுவது சரி கிடையாது. என்னதான் ஆனாலும் பரவாயில்லை என்று தைரியமாக எதிர்கொண்டால் நிச்சயம் அந்த பிரச்சனையில் இருந்து வெளியே வர முடியும் என கவாஸ்கர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement