ஹர்ஷல் படேல் பத்தி இப்போ எதுவும் சொல்லாதீங்க. வேர்ல்டுகப்ல பாருங்க – சுனில் கவாஸ்கர் பேட்டி

Gavaskar
Advertisement

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று முடிந்த ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி சூப்பர் ஃபோர் சுற்றில் தோல்வி அடைந்து வெளியேறிய வேளையில் அடுத்ததாக தற்போது டி20 உலக கோப்பை தொடருக்காக தயாராகி வருகிறது. இந்நிலையில் செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் உலக கோப்பை அணியை அறிவிக்க வேண்டும் என ஐசிசி கெடு விதித்ததன் காரணமாக நேற்று பிசிசிஐ தரப்பில் 15 பேர் கொண்ட உலகக் கோப்பை இந்திய அணி அறிவிக்கப்பட்டது.

Bhuvneshwar-Kumar-1

அதில் ஆசிய கோப்பை தொடரில் விளையாடிய பெரும்பாலான வீரர்கள் அப்படியே இடம் பிடித்துள்ளதால் தற்போது இந்திய அணி தேர்வு குறித்து பல்வேறு விமர்சனங்கள் சமூக வலைதளத்தில் எழுந்துள்ளன. அதோடு காயம் காரணமாக ஆசிய கோப்பையில் விளையாடாத ஹர்ஷல் பட்டேல் மற்றும் பும்ரா ஆகியோர் அணிக்கு திரும்பியுள்ளனர்.

- Advertisement -

இந்நிலையில் ஆஸ்திரேலியா மைதானத்தில் பெரிதும் பரீட்சயம் இல்லாத ஹர்ஷல் படேல் அங்கு எவ்வாறு பந்து வீசப் போகிறார் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பிவருகின்றனர். அதிலும் குறிப்பாக ஆன்லைன் மூலம் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட சுனில் கவாஸ்கரிடம் ரசிகர்கள் :

Harshal Patel David Miller IND vs RSA

ஹர்ஷல் படேல் ஆஸ்திரேலியா நாட்டினை போன்ற வேகமான அந்த ஆடுகளத்தில் எவ்வாறு பந்து வீசப் போகிறார்? அவரது ஓவரில் சுலபமாக பேட்ஸ்மேன்கள் எளிதாக சிக்ஸர்களை அடித்து விடுவார்கள் அல்லவா? என்று கேள்வி எழுப்பினர். இந்த கேள்வியால் கோபமடைந்த கவாஸ்கர் சற்று அதிருப்தி அடைந்து : உலகக்கோப்பை தொடங்கியவுடன் அதனை பார்ப்போம்.

- Advertisement -

இப்போதே எப்படி முன்கூட்டியே அந்த முடிவுக்கு வருகின்றீர்கள்? அவர் மெதுவாக பவுலிங் செய்வதால் ரன்களை விட்டுக் கொடுத்து விடுவார் என்று அர்த்தமா? என்று கடுமையான பதிலை அளித்தார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் : இந்திய அணியின் பந்துவீச்சு யூனிட் குறித்த திட்டம் தற்போது நிர்வாகத்திற்கு மட்டுமே தெரியும்.

இதையும் படிங்க : டி20 உலகக்கோப்பை அணியில் வாய்ப்பு கிடைக்காதது குறித்து முதல் முறையாக பேசிய சஞ்சு சாம்சன் – விவரம் இதோ

ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் மூன்று வேகப்பந்து வீச்சாளர்களுடன் இந்திய அணி செல்ல போகிறார்களா? அல்லது நான்கு வேகப்பந்து வீச்சாளர்களுடன் செல்லப் போகிறார்களா? என்பது அவர்களுக்கே தெரியும் என சுனில் கவாஸ்கர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement