டி20 உலகக்கோப்பை அணியில் வாய்ப்பு கிடைக்காதது குறித்து முதல் முறையாக பேசிய சஞ்சு சாம்சன் – விவரம் இதோ

Samson
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் அடுத்த மாதம் துவங்க இருக்கும் டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. ரோகித் சர்மா தலைமையில் 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்ட பின்னர் இந்த இந்திய அணி தேர்வு குறித்து பல்வேறு விவாதங்கள் சமூக வலைதளத்தில் எழுந்துள்ளன. ஏனெனில் ஆசிய கோப்பை தொடரில் விளையாடிய பெரும்பாலான வீரர்களுக்கு இந்திய அணியில் அப்படியே இடம் கிடைத்துள்ளது.

IND

- Advertisement -

அது தவிர்த்து காயம் காரணமாக ஆசிய கோப்பையில் விளையாடாத பும்ரா மற்றும் ஹர்ஷல் பட்டேல் ஆகியோர் மட்டுமே அணிக்கு மீண்டும் திரும்பி உள்ளனர். அவர்களை தவிர்த்து ஒரு சில வீரர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை தந்துள்ளது. அந்த வகையில் கடந்த பல ஆண்டுகளாகவே ஐபிஎல் தொடரில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இந்திய அணியின் இளம் வீரரான சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏனெனில் ஐபிஎல் தொடரில் அதிரடியாக பேட்டிங் செய்வது மட்டுமின்றி ராஜஸ்தான் அணியின் கேப்டனாகவும் செயல்படும் சஞ்சு சாம்சங் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அதோடு சமீபத்தில் இந்திய டி20 அணியில் தொடர்ச்சியாக இடம் பெற்று வரும் அவர் தனக்கு கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் அதிரடியாக பேட்டிங் செய்து அசர வைத்து வருகிறார். இப்படி ஒரு அதிரடியான வீரர் ஆஸ்திரேலியா மண்ணில் மிகச் சிறப்பாக விளையாட முடியும் என்று பல்வேறு முன்னாள் வீரர்களுக்கும் அவருக்கு ஆதரவு தெரிவித்து வந்தனர்.

Sanju Samson 1

ஆனால் இந்த உலகக் கோப்பை தொடருக்கான அணியில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கிடைக்காதது பெரிய விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் இந்திய உலகக்கோப்பை அணியில் தனக்கு வாய்ப்பு கிடைக்காதது குறித்து முதல் முறையாக பேசியுள்ள சஞ்சு சாம்சன் சில விடயங்களை பகிர்ந்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் : டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் என்னை சேர்க்க வேண்டும் என பலர் சமூகவலைகள் மூலமாக கோரிக்கை விடுத்து வருகிறார்கள். அது எனக்கு தெரியும்.

- Advertisement -

ஆனால் என்னுடைய எண்ணம் தெளிவாக இருக்கிறது. ராகுல் அல்லது ரிஷப் பண்ட் ஆகிய இருவரில் ஒருவருக்கு பதிலாக நான் தேர்வு செய்யப்பட வேண்டும் என்று நினைக்கவில்லை. ஏனெனில் ராகுல் மற்றும் ரிஷப் பண்ட் ஆகிய இருவரும் என்னுடைய அணிக்காக விளையாடவில்லை. நமது இந்திய அணிக்காக விளையாடுகின்றனர். இந்த இருவருடனும் நான் அந்த இடத்திற்காக போட்டி போட்டால் அது எனது அணியை நானே கீழே கொண்டு செல்வதற்கு சமம்.

இதையும் படிங்க : நல்ல வேளை சிஎஸ்கே என்னை கழற்றிவிட்டாங்க – வெற்றியின் ரகசியத்தை சொல்லும் புஜாரா

நான் அப்படி செய்ய மாட்டேன்.எனக்கான வாய்ப்பு வரும் வரை நான் காத்திருப்பேன் என உருக்கமாக பேசியுள்ளார். இந்த பேட்டியின் மூலம் நிச்சயம் தனக்கு வாய்ப்பு கிடைக்கும் வரை போராடி அதை நிரந்தர இடமாக மாற்றும் வரை சஞ்சு சாம்சன் முயற்சிப்பார் என்பது தெளிவாக தெரிகிறது.

Advertisement