எதை பத்தியும் அதிகமா யோசிக்க வேணாம். எல்லாம் நல்லதாவே நடக்கும் – இந்திய அணிக்கு தெம்பூட்டிய கவாஸ்கர்

Gavaskar

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி படு மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி தோல்வியடைந்ததை அடுத்து இந்திய அணி மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. அதுமட்டுமின்றி இந்த முக்கியமான ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை இழந்த இந்திய அணி அடுத்ததாக இங்கிலாந்து மண்ணில் அந்த அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது.

இதன் காரணமாக இந்திய அணி மீண்டும் மிகப்பெரிய அழுத்தத்தை சந்திக்கும் என்றும் இங்கிலாந்து அணிக்கெதிரான எதிராக தோல்வியை சந்திக்கும் என்றும் பரவலாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த இங்கிலாந்து தொடர் குறித்து இந்திய அணி பயப்பட வேண்டாம் என்று இந்திய அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் கூறுகையில் : ஆகஸ்ட் செப்டம்பர் மாதங்களில் இங்கிலாந்தில் மழை இருக்காது எனவே நன்றாக வெயில் அடிக்கும். அதன் காரணமாக ஆடுகளத்தில் ஈரத்தன்மை இல்லாமல் காய்ந்து இருக்கும். இதன் காரணமாக வேகப்பந்து வீச்சாளர்கள் சிரமப்படுவார்கள். இங்கிலாந்து சார்பிலும் ஆண்டர்சன், பிராடு கூட விக்கெட் எடுக்க தடுமாறுவார்கள்.

broad

அதனால் இங்கிலாந்து உடனான தொடர் குறித்து இந்திய அணி கவலைப்படத் தேவையில்லை என்று சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் : நியூசிலாந்து அணியுடனான உலகக் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் ஏற்பட்ட தோல்வி இந்திய அணி மறக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

- Advertisement -

இந்திய அணியில் திறமையானவர்கள் இருக்கிறார்கள் இந்த தோல்வி இந்திய அணியை மறக்க வேண்டும். இந்திய அணி இந்த தோல்வியில் இருந்து எழுச்சி பெறும். இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய வெல்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement