கொல்கத்தா அணிக்கு இவர் தேவையில்லாத வீரர். அவரோட வீக்னஸ் எல்லாருக்கும் தெரியும் – கவாஸ்கர் கருத்து

Gavaskar

கொல்கத்தா அணி கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் கடுமையாக சொதப்பி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாமல் அந்த தொடரில் இருந்து வெளியேறியது. அதனைத் தொடர்ந்து தற்போது இந்த 14வது சீசனிலும் படுமோசமாக சொதப்பி வருகிறது. இதுவரை நடைபெற்று முடிந்துள்ள 7 போட்டிகளில் அவர்கள் இரண்டு போட்டிகளில் மட்டுமே வெற்றியை பெற்று இருக்கின்றனர். அதனால் இந்த வருடமும் அவர்களின் ஐபிஎல் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பு மங்கிக் கொண்டே வருகிறது.

KKR

நேற்று நடைபெற்று முடிந்த டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 154 ரன்கள் என்கின்ற மிகக் குறைவான சுமாரான ஸ்கோரை எடுத்தது. அந்த அணியில் நித்திஷ் ரானா, சுப்மன் கில், தினேஷ் கார்த்திக், இயான் மோர்கன் என பல நட்சத்திர வீரர்கள் இருந்தும் அவர்களால் ரன் குவிக்க முடியவில்லை. ஒரே ஒரு வீரராக ரசல் மட்டுமே அந்த அணிக்கு சற்று சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

இந்நிலையில் கொல்கத்தா அணியின் இந்த மோசமான ஆட்டத்தை பார்த்து பேசியுள்ள சுனில் கவாஸ்கர் அவர்கள் அணியில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்தும் பேசியுள்ளார். இது குறித்து அவர் அளித்த பேட்டியில் : கொல்கத்தா அணியின் பேட்டிங் வரிசையில் மாற்றம் கொண்டு வந்தால் மட்டுமே அந்த அணியால் வெற்றி பெற முடியும் .அவ்வளவு திறமையான வீரர்கள் அந்த அணியில் இருந்தும் அவர்களால் பெரிய அளவு ரன்களை எடுக்க முடியவில்லை.

rana

கில், ரானா, மோர்கன், திரிப்பாதி, தினேஷ் கார்த்திக், ரஸல் என அனைவரும் இருந்தும் ரன்கள் குவித்த தடுமாறி வருகின்றனர். இந்த வரிசையில் சுனில் நரைனை ஏன் இறங்குகிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை ? அவர் அவ்வளவு பெரிய பேட்ஸ்மனா ? என்பதும் எனக்குத் தெரியவில்லை அவருடைய வீக்னஸ் என்பது என்ன என்பது அனைத்து அணிகளும் கண்டுபிடித்துவிட்டனர். அப்படி இருந்தும் அவரை டீமில் விளையாட வைத்து வருவது தேவையில்லாத ஒன்று.

- Advertisement -

அவரை அணியில் இருந்து நீக்கினால் மட்டுமே கொல்கத்தா அணி வெற்றி பெற முடியும் அவரை நீக்கிவிட்டு அவருக்குப் பதிலாக ஒரு நல்ல பேட்ஸ்மேனை அணிகள் சேர்த்து விளையாட வைக்க வேண்டும் என கொல்கத்தா அணிக்கு அட்வைஸ் கொடுத்து கவாஸ்கர் பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.