இவங்க 2 பேர் என்ன இப்படி ஆடுறாங்க. ரொம்ப மோசமான ஷாட் செலக்சன் – கவாஸ்கர் காட்டம்

gavaskar
- Advertisement -

ஆஸ்திரேலிய அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தற்போது நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இன்று துவங்கி விளையாடி வருகிறது. இன்று காலை 8:30 மணிக்கு அடிலெய்டு மைதானத்தில் துவங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட்கோலி பகல் இரவு டெஸ்ட் போட்டி என்பதால் முதலில் பேட்டிங் செய்தால் மைதானம் சாதகமாக அமையும் என்று பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி தற்போது இந்திய அணி முதல் இன்னிங்சை விளையாடி வருகிறது.

indvsaus

- Advertisement -

இந்திய அணி இன்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 233 ரன்கள் குவித்துள்ளது. அதிகபட்சமாக கேப்டன் விராட்கோலி 180 பந்துகளை சந்தித்து 8 பவுண்டரிகளுடன் 74 ரன்களை குவித்தார். புஜாரா 43 ரன்களையும், ரஹானே 42 ரன்கள் குவித்தனர். இன்றைய முதல் நாள் ஆட்ட முடிவில் விருத்திமான் சஹா 25 பந்துகளில் 9 ரன்கள் எடுத்த நிலையிலும், அஸ்வின் 17 பந்துகளில் 15 ரன்கள் எடுத்த நிலையிலும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர்.

இந்நிலையில் இந்த போட்டியில் மீண்டும் ஒருமுறை இந்திய அணியின் துவக்க ஜோடி மோசமான சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளது. குறிப்பாக பெரிய சர்ச்சைக்கு இடையே வாய்ப்பைப் பெற்ற ப்ரித்வி ஷா சிறப்பாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தான் சந்தித்த இரண்டாவது பந்திலேயே கிளீன் போல்டாகி வெளியேறினார். சமீபமாகவே மோசமான பார்மில் இருக்கும் அவர் இந்த போட்டியிலும் டக் அவுட் ஆகியுள்ளது பெரும் அதிர்ச்சி அளித்தது.

Shaw

மேலும் அதே போன்று மறுபுறம் மாயங்க் அகர்வால் 40 பந்துகளை சந்தித்து 2 பவுண்டரிகளை குவித்து 17 ரன்கள் எடுத்து ஆட்டம் இருந்து வெளியேறினார். அதன் பின்னர் கோலி மற்றும் புஜாரா ஜோடி சிறப்பாக விளையாடி ஓரளவு ரன்களை குவித்தது. புஜாரா 160 பந்துகளில் 43 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அதேபோன்று மறுபுறம் நிலைத்து நின்று ஆடிய கோலி 74 ரன்கள் எடுத்திருந்தபோது ரன்அவுட் ஆகி வெளியேறினார். இப்படி இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க இந்திய அணி கண்ட மோசமான துவக்கமே காரணம் என்றும் சிலர் கூறி வருகின்றனர்.

- Advertisement -

அந்த வகையில் தற்போது இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் இந்திய அணியின் துவக்க வீரர்கள் குறித்து தனது கடுமையான கருத்துக்களை முன்வைத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : இந்த போட்டியில் இந்திய அணியில் துவக்க வீரர்கள் மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளனர். இன்றைய போட்டியில் அவர்கள் விளையாட்டை பார்த்து இருந்தால் உங்களுக்கு நன்றாக தெரிந்திருக்கும்.

agarwal

மிக மோசமான ஷாட்டுகளை தேர்ந்தெடுத்து அவர்கள் விளையாடுகின்றனர். அவர்களின் பேட்டிற்கும், கால் பேடுக்கும் இடையே இருக்கும் இடைவெளி பார்த்தாலே அவர்கள் எவ்வளவு தவறான சாட்டுகளை தேர்வு செய்கிறார்கள் என்பது புரியும். அவர்கள் இருவரும் தங்களது தவறுகளை சரி செய்து கொள்ள வேண்டும் என்று கவாஸ்கர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement