இந்தியாவின் ஆல்டைம் சிறந்த வீரர் இவர்தான். ஆனால் அது சச்சின், கோலி, தோனி இல்லை – கவாஸ்கர் குறிப்பிட்டது யாரை தெரியுமா ?

Sunil-gavaskar
- Advertisement -

இந்தியா 1935 ஆம் ஆண்டு முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறது. அதன் பின்னர் பல ஆண்டுகள் கழித்துத்தான் முதல் உலகக்கோப்பையை வெல்ல முடிந்தது. இந்த காலகட்டத்திற்கு இடையில் இந்தியாவில் பல நூறு ஜாம்பவான் வீரர்கள் உருவாகி இருக்கிறார்கள்.
அவர்களில் ஒரு சில வீரர்கள் வரலாற்றில் தங்களது பெயரையும் பொறித்து வைத்து விட்டுச் சென்றிருக்கிறார்கள்.

kapildev

- Advertisement -

குறிப்பாக இந்திய கிரிக்கெட் அணி பேட்ஸ்மேன்களின் சொர்க்கபுரியாக இருந்திருக்கிறது. இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் அதிரடி துவக்க வீரர் சுனில் கவாஸ்கர் இந்திய கிரிக்கெட் வரலாற்றில் யார் மிகச்சிறந்த வீரர் என்பதை பற்றி பேசியிருக்கிறார். அவர் கூறுகையில்…

வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு கிரிக்கெட் வீரர்கள் இந்திய ரசிகர்களை தங்களது ஆட்டத்தின் மூலமாக கவர்ந்து இழுத்து உள்ளனர். சச்சின், தோனி, கோலி என பல கிரிக்கெட் வீரர்கள் இந்திய அணிக்காக பல ஆயிரம் ரன்களை குவித்து இருக்கின்றனர். ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொருவர் தங்களது ஆதிக்கத்தை செலுத்தி வருகின்றனர்.

Kapil

இருப்பினும் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் ,ஆல்ரவுண்டருமான கபில்தேவ் தான் இந்தியாவின் கிரிக்கெட் வரலாற்றில் நம்பர் ஒன் கிரிக்கெட் வீரர் என்று நான் கருதுகிறேன்.
அவரால்தான் பேட்டிங், பந்துவீச்சு, கேப்டன்ஷிப் என அனைத்தையும் சரிவர செய்ய முடியும் .இந்தியாவை பல மோசமான சூழ்நிலைகளில் இருந்து தனது திறமையின் மூலம் வெளிக்கொண்டு வந்துள்ளார்.

அந்த காலகட்டத்தில் சிறந்த வீரர்களில் ஒருவராக அவர் இருந்தார். இதன் காரணமாக இவர்தான் இந்திய கிரிக்கெட் வரலாற்றில் நம்பர் ஒன் வீரர் என்று தெரிவித்துள்ளார் சுனில் கவாஸ்கர். கபில் தேவ் வெற்றிபெற்ற 1983 ஆம் ஆண்டு உலககோப்பை அணியில் கவாஸ்கரும் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement