அடுத்த ஆண்டு தோனி எவ்வளவு ரன்கள் அடிப்பார் ? இப்போதே கணித்து கூறிய கவாஸ்கர் – உங்க கருத்து என்ன ?

Gavaskar

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த வருட ஐபிஎல் தொடரில் சொல்லிக்கொள்ளும்படி பெரிதாக ஆடவில்லை. இந்த வருடம் ஐபிஎல் தொடரில் 14 போட்டிகளில் விளையாடி வெறும் 6 போட்டிகளில் தான் வெற்றி பெற்றிருந்தது. அதிலும் கடைசி மூன்று போட்டிகளில் வெற்றி பெறவில்லை என்றால் அந்த அணி 10 புள்ளிகளை கூட தொட்டு இருக்காது இதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகிறது.

cskvssrh

அணியில் மூத்த வீரர்கள் மட்டுமே இருக்கிறார்கள். நம்பிய வீரர்கள் அனைவரும் தோனியை கைவிட்டுவிட்டார்கள். குறிப்பாக சுரேஷ் ரெய்னா அணியின் தளபதியே இல்லை. இதுதான் இந்த வருடம் பிளே ஆப் சுற்றுக்கு கூட செல்ல முடியாமல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வெளியேறுவதற்கு காரணமாக இருக்க வேண்டும்.

மேலும் டோனி இந்த வருட தொடரில் பெரிதாக ஏதும் ரன் அடிக்கவில்லை. அனைவரும் ஓய்வுபெற்ற தோனி மிகச் சிறப்பாக ஆடுவார் என்று எதிர்பார்த்தனர். ஆனால் அவர் சரியாக விளையாடவில்லை இந்நிலையில் அடுத்த வருட ஐபிஎல் தொடரிலும் தோனி கண்டிப்பாக ஆடுவார் என்று தெரியவந்திருக்கிறது.

அப்படி ஆடினால் தோனியால் சமரசம் இல்லாமல் குறைந்தது 400 ரன்கள் அடிக்க முடியும் என்று முன்னாள் இந்திய வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து அவர் கூறுகையில் : ஒவ்வொரு பெரிய விஷயத்திலும் பல மிகச் சிறிய விஷயங்கள் இருக்கும். தோனி போதுமான அளவிற்கு உள்ளூர் போட்டிகளில் ஆடவில்லை. கண்டிப்பாக அதில் விளையாட வேண்டும் ஆனால் உள்ளூர் போட்டிகளில் பெரிதாக அவரால் விளையாட முடியாது.

- Advertisement -

Dhoni-1

அழுத்தம் அதிகமான போட்டிகளில் தோனி கண்டிப்பாக ஆடி தன்னைப் பழக்கிக் கொள்ள வேண்டும். இப்பயிற்சியில் பெரிதாக நெருக்கடி இருக்காது இதன் காரணமாக குறைந்தபட்ச உள்ளூர் போட்டிகளில் அவர் ஆட வேண்டும். அப்படிச் செய்தால் கண்டிப்பாக தோனியால் 400 ரன்கள் அடிக்க முடியும் என்று தெரிவித்திருக்கிறார் சுனில் கவாஸ்கர்.