RCB vs KKR : இப்படி ஒரு ஷாட்டை இவரால் மட்டுமே ஆட முடியும் – கவாஸ்கர் புகழாரம்

நேற்றைய கொல்கத்தா அணிக்கு எதிராக முதலில் களமிறங்கிய பெங்களூரு அணியின் கேப்டன் கோலி சிறப்பாக விளையாடி ரன்களை குவித்தார். இருப்பினும் பெங்களூரு கடைசியில் தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது.

sunil-gavaskar
- Advertisement -

நேற்றைய போட்டியில் கோலி சிறப்பாக விளையாடி 49 பந்துகளில் 84 ரன்களை குவித்தார். இதில் 2 சிக்ஸர்கள் மற்றும் 9 பவுண்டரிகள் அடங்கும். அதிலும் நேற்று போட்டியை சந்தித்த முதல் பந்திலே கோலி அடித்த கவர் டிரைவ் உலகத்தரத்தில் இருந்தது. அந்த ஷாட்டை பார்த்த கவாஸ்கர் வர்ணனை செய்தவை : இதுபோன்ற ஷாட்டை டாப் கிளாஸ் பார்மில் இருப்பவர்களால் மட்டுமே அடிக்கமுடியும் என்றும் மேலும், இந்த ஷாட் டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் ஆகிய மூன்றிற்கும் சிறந்த ஷாட் என்று குறிப்பிட்டார். இதோ அந்த கவர் டிரைவ் வீடியோ :

- Advertisement -

ஐ.பி. எல் தொடரின் 17 ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு பெங்களூரு மைதானத்தில் நடைபெற்றது, இந்த போட்டியில் பெங்களூரு மற்றும் கொல்கத்தா அணிகள் மோதின. முதலில் டாஸ் வென்று பந்துவீச்சினை தேர்வு செய்தது கொல்கத்தா. அதன்படி முதலில் ஆடிய பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் கோலி 84 ரன்களை அடித்தார்.

பிறகு 206 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய கொல்கத்தா அணி 19.1 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 206 ற்றங்களை அடித்து வெற்றி பெற்றது. இந்த போட்டியில் கொல்கத்தா அணியின் சார்பாக க்றிஸ் லின் 43 ரன்களும், ரஸ்ஸல் 48 ரன்களும் அடித்தனர். இதன்மூலம் கொல்கத்தா அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

Advertisement