ஆர்.சி.பி டீம் எடுத்த இந்த முடிவு சூப்பரான ஒன்னு. இதுதான் கரெக்ட் – சுனில் கவாஸ்கர் கருத்து

Gavaskar
- Advertisement -

இந்தியாவில் வருகிற மார்ச் 26-ஆம் தேதி 15-வது ஐபிஎல் சீசனானது கோலாகலமாக துவங்குகிறது. ஏற்கனவே இந்த தொடருக்கான ஐபிஎல் போட்டிகளின் அட்டவணை வெளியாகி இருந்த வேளையில் அனைத்து அணிகளும் தற்போது தங்களது அணியில் உள்ள வீரர்களை ஒருங்கிணைத்து இந்த தொடருக்கான ஏற்பாட்டு வேலைகளில் மும்முரமாக இருக்கிறது. அந்த வகையில் ஏற்கனவே இந்த தொடரில் பங்கேற்கும் ஒன்பது அணிகளும் தங்களது அணியின் கேப்டன்களை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது.

ipl

- Advertisement -

அதேவேளையில் நேற்று பெங்களூரு அணி தங்களது அணியின் கேப்டனாக தென்ஆப்பிரிக்கா முன்னாள் வீரர் டு பிளிசிஸ்ஸை நியமனம் செய்தது. கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் கடந்த ஆண்டு வரை அணியின் கேப்டனாக இருந்த கோலியால் ஒருமுறைகூட டைட்டிலை வெல்ல முடியவில்லை. அதோடு கடந்த இரண்டு சீசன்களில் அவரது பேட்டிங்கும் சற்று சுமாரான இருந்ததால் அவர் தனது பேட்டிங்கில் கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காக கேப்டன் பொறுப்பிலிருந்து விலகி இருந்தார்.

இதன் காரணமாக இந்த ஆண்டு அவர் ஒரு பேட்ஸ்மேனாகவே அணியில் தொடருவார் என்கிற காரணத்தினால் புதிய கேப்டனை தேர்வு செய்ய வேண்டிய அவசியம் அவர்களுக்கு ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த ஆண்டு சிஎஸ்கே அணிக்காக விளையாடிய டு பிளேசிஸ் இந்த மெகா ஏலத்தின் போது அந்த அணியில் இருந்து விடுவிக்கப்பட்டார். எனவே அவரை 7 கோடி ரூபாய் கொடுத்து ஏலத்தில் எடுத்த பெங்களூரு அணி தற்போது அவரை கேப்டனாக நியமித்துள்ளது.

faf du plessis RCB

டு பிளிசிஸ் சர்வதேச டி20 போட்டிகள் மட்டுமின்றி ஐபிஎல் தொடரிலும் மிகப்பெரிய அனுபவம் கொண்டவர் என்பதினால் அந்த வகையில் அவரை கேப்டனாக ஆர்சிபி அணி நியமித்துள்ளது. ஆர்சிபி அணியின் கேப்டனாக டூபிளெஸ்ஸிஸ் நியமிக்கப்பட்டதை தொடர்ந்து பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தற்போது பெங்களூர் அணி எடுத்த இந்த முடிவு குறித்து தனது கருத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் கூறுகையில் : ஆர் சி பி அணி எடுத்த இந்த முடிவு வரவேற்கத்தக்கது. ஏனெனில் டுப்லஸ்ஸிஸ் கேப்டன்சியில் நல்ல அனுபவம் கொண்டவர். சர்வதேச கிரிக்கெட்டில் தென் ஆப்பிரிக்கா அணி சற்று சிக்கலை சந்தித்த போது அந்த அணியின் கேப்டனாக செயல்பட்ட அவர் சிறப்பாக அணியை வழிநடத்தினார். அதோடு அவரது கேப்டன்சியில் எந்தவித குறையும் கிடையாது. எனவே அவரை ஆர்சிபி அணி கேப்டனாக நியமித்ததில் எனக்கு எந்த ஒரு ஆச்சரியமும் கிடையாது.

இதையும் படிங்க : இவர் விளையாடுவதை நான் காசு குடுத்து கூட பார்க்க தயார். என்ன பவுலர்ங்க அவரு – இர்பான் பதான் பதிவு

அணியில் உள்ள வீரர்களை எவ்வாறு வழிநடத்திக் கொண்டு செல்ல வேண்டும் என்பதை சரியாக புரிந்த அவர் நிச்சயம் ஆர்சிபி அணியின் சிறப்பான கேப்டனாக செயல்படுவார் என்று சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் ஆர்சிபி அணி எடுத்த இந்த ஒரு முடிவு சிறப்பான முடிவு என்றும் டிவில்லியர்ஸ் விட்டுச்சென்ற இடத்தை கனகச்சிதமாக கையிலெடுத்து அவரால் சிறப்பாக செயல்பட முடியும் என்றும் நிச்சயம் டு பிளிசிஸ் ஒரு கேப்டனாகவும், துவக்க வீரராகவும் அவர் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்துவார் என கவாஸ்கர் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement