- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இதை மட்டும் பண்ணா போதும்.. ஆஸ்திரேலிய மண்ணில் மீண்டும் ரிஷப் பண்டால் அசத்த முடியும் – கவாஸ்கர் அட்வைஸ்

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் சுமாரான ஆட்டத்தையே வெளிப்படுத்தினாலும் டெஸ்ட் போட்டிகளை பொருத்தவரை மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தக் கூடியவர். கடந்த முறை ஆஸ்திரேலியா மண்ணில் நடைபெற்ற தொடரில் இந்திய அணியின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாகவும் அவர் திகழ்ந்தார்.

ரிஷப் பண்ட் இதை பண்ண போதும் அசத்துவார் :

குறிப்பாக காபா டெஸ்ட் போட்டியின் போது மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியின் வரலாற்று வெற்றிருக்கும் அழைத்துச் சென்றிருந்தார். அதனை தொடர்ந்து தற்போது ஆஸ்திரேலிய நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவர் இந்த தொடரிலும் அசத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

ஆனால் இந்த தொடரின் முதல் மூன்று போட்டியில் அவரது சுமாரான ஆட்டம் ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை அளித்துள்ளது. ஆனாலும் ரிஷப் பண்ட்டால் நிச்சயம் அதிரடியான ஒரு இன்னிங்ஸை விளையாட முடியும் என்று பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர் ரிஷப் பண்டின் பேட்டிங் குறித்து பேசுகையில் கூறியதாவது : ரிஷப் பண்ட் மைதானத்திற்குள் வந்ததும் ஆக்ரோஷமாக விளையாட நினைத்து ஆட்டம் இழந்து வெளியேறுகிறார். என்னை பொறுத்தவரை முதல் அரைமணி நேரத்திற்கு ஆடுகளத்தையும், பவுலர்களையும் நன்கு புரிந்து கொண்டு விளையாட வேண்டும்.

- Advertisement -

அந்தவகையில் எதிர்வரும் 2 டெஸ்ட் போட்டிகளில் அவர் மைதானத்தின் தன்மையை அறிந்து பந்திற்கு மரியாதை கொடுத்து விளையாட வேண்டும். அதன்பிறகு சூழலை புரிந்து கொண்டு அதிரடியாக விளையாடினால் அவரால் பெரிய ரன் குவிப்பை வழங்க முடியும்.

இதையும் படிங்க : மற்ற கேப்டன்களை விட எம்.எஸ் தோனி சக்சஸ்புல் கேப்டனாக இருக்க இதுதான் காரணம் – அஷ்வின் கருத்து

ஆஸ்திரேலிய வீரர்கள் ரிஷப் பண்ட்டிற்கு எதிராக பந்தின் கோணத்தை மாற்றி வீசுகிறார்கள். எனவே அதை எல்லாம் கணித்து அவர் சமாளித்து பேட்டிங் செய்து விட்டால் நிச்சயம் அவரால் பெரிய ரன் குவிப்பை வழங்க முடியும் என சுனில் கவாஸ்கர் கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -