தம்பி நல்லா காமெடி பண்றீங்க. அக்தரை நேரடியாக கிண்டலடித்து நோஸ் கட் செய்த கவாஸ்கர் – விவரம் இதோ

Akhtar
- Advertisement -

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக தற்போது உலக நாடுகள் பெரும் அச்சத்தில் இருக்கின்றன. சீனாவில் உருவான இந்த வைரஸ் அந்நாட்டில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி விட்டு தற்போது குறைத்து அதிலிருந்து மீண்டு உள்ளது. ஆனால் தற்போது கொரோனா வைரஸ் பல்வேறு நாடுகளிலும் பரவி தனது ஆட்டத்தை ஆரம்பித்துள்ளது. அதில் இந்தியாவும் பாகிஸ்தானும் தப்பவில்லை என்றே கூறலாம். இந்நிலையில் இந்தியாவில் தற்போது 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

India v Pakistan

- Advertisement -

இதன் காரணமாக இந்த வருடம் நடைபெற இருந்த ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் 29ம் தேதியிலிருந்து தற்போது ஏப்ரல் 15ம் தேதி வரை தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மேலும் அதனை தொடர்ந்தும் இந்த தொடர் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சோயப் அக்தர் இந்த நிலையை மாற்றுவது குறித்து தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.

அதன்படி இந்தியா-பாகிஸ்தான் இரு நாடுகளுக்கும் நிதி திரட்ட ஒரு யோசனை ஒன்றை கூறியுள்ளார். அதன்படி இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே 2007-ம் ஆண்டு இரு தரப்பு தொடர் நடைபெற்றது. அதன் பின்னர் தீவிரவாத தாக்குதல் மற்றும் இரு நாடுகளின் அரசியல் பிரச்சினை காரணமாக இதுவரை 13 ஆண்டுகளாக இருதரப்பு தொடர் நடைபெறவே இல்லை. ஐசிசி தொடர்களில் மட்டும் இது அணிகளும் மோதிக் கொள்கின்றன.

Pakistan 1

இந்நிலையில் தற்போது இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு நிதி திரட்டும் வகையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை நடத்துவதன் மூலம் மீண்டும் இந்தியா பாகிஸ்தான் தொடரை ஏற்படுத்தி விளையாட வைப்பதன் மூலம் இரு நாடுகளுக்கும் நிதி திரட்ட இது ஒரு வழியாக இருக்கும் என்று சோயிப் அக்தர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த இரு நாடுகள் விளையாடும் போது அதிக அளவில் பார்வையாளர்கள் திரள்வார்கள் என்பதால் பெரிய அளவில் நிதி கிடைக்கும் என்று கூறினார்.

- Advertisement -

Pakistan

இந்நிலையில் அவரின் இந்த கருத்துக்கு பதில் அளித்த இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் கூறுகையில் : அக்தர் கூறியது அவரது தனிப்பட்ட கருத்து ஆனால் அது நமக்கு தற்போது வேண்டியது பணம் அல்ல. பணம் தேவைப்படும் அளவிற்கு இந்தியாவிடம் உள்ளது இந்தச் இக்கட்டான சூழ்நிலையில் நமது அதிகாரிகள் எப்படி பணியாற்றுகின்றனர் என்பது தான் நமக்கு தேவையான ஒரு விடயம். பிசிசிஐ ஏற்கனவே 51 கோடி ரூபாய் அளித்துள்ளது இன்னும் தேவைப்பட்டால் அதையும் வழங்க தயாராக உள்ளது என்று தனது கருத்தினை தெரிவித்திருந்தார்.

தனியாக நிதி திரட்ட வேண்டிய அவசியம் பிசிசிஐக்கு இல்லை. தற்போதைக்கு இந்த நிலைமை சரியாகும் சூழ்நிலை இதனால் இந்த நேரத்தில் கிரிக்கெட் போட்டியை நடத்துவது என்பது தேவையில்லாத ஒரு ரிஸ்க் எடுப்பது போல் ஆகும். அதுமட்டுமில்லாமல் ரிஸ்க் எடுப்பதற்கான சரியான நேரமும் இது கிடையாது.

gavaskar

இதே கேள்வி முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் இடமும் கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த கவாஸ்கர் : லாகூர் நகரில் பனி பொழியா வாய்ப்பு இருக்கிறதே தவிர, இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே போட்டி நடக்க வாய்ப்பே இல்லை. இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஐசிசி தொடர்களின் மோதிக் கொண்டு தான் இருக்கிறது” என்று கூறியிருந்தார்.

இதனை பார்த்து அதற்கு பதிலளித்த சோயப் அக்தர் : ”லாகூர் நகரில் சென்ற வருடமும் கோடை பனி நேர்ந்தது. முடியாத காரியங்கள் எதுவும் இல்லை” என்று தெரிவித்திருந்தார். இதனை பார்த்த சுனில் கவாஸ்கர்… ”இவரது நகைச்சுவை மிகவும் பிரமாதமாக உள்ளது. நல்ல நகைச்சுவை உணர்வு கொண்டவர் அவர் என்று கூறி அவரை மீண்டும் கலாய்த்து அனுப்பினார்.

Advertisement