ரெய்னாவிற்கு பதிலாக சி.எஸ்.கே அணியில் இவரே 3 ஆவது இடத்தில் இறங்க வேண்டும் – கம்பீர் ஓபன் டாக்

Gambhir

ஐபிஎல் தொடங்க இன்னும் வெகு சில நாட்களே உள்ளன. இந்நிலையில் இந்த ஐபிஎல் தொடர் தொடங்கும் முன்னர் சிஎஸ்கே குறித்து அனைவரும் மிகப் பெரிய எதிர்பார்ப்பில் இருந்த நிலையில் தற்போது சிஎஸ்கே அணிக்குள் சர்ச்சைகளுக்கு மேல் சர்ச்சைகள் ஏற்பட்டு ரசிகர்களை மிகவும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. அதாவது ஏற்கனவே 13 வீரர்களுக்கு கொரோனா வைரஸ் பாதித்தது. அதுமட்டுமின்றி ரெய்னா விலகல் என தொடர்ந்து பிரச்சனைகளை சந்தித்து வருகிறது.

முதலில் ரெய்னா தனிப்பட்ட காரணங்களுக்காக அணியில் இருந்து வெளியேறியதாக கூறப்பட்டது. ஆனால் அதன் பின்னரே அவருக்கும் சி.எஸ்.கே அணி நிர்வாகத்திற்கும் இடையே ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக ரெய்னா அதிர்ப்தியுடன் இந்த தொடரில் இருந்து விலகியது தெரியவந்தது. மேலும் அது தொடர்பான பல்வேறு செய்திகள் வெளியாகிய வண்ணமே உள்ளது.

இந்நிலையில் தற்போது ரெய்னாவின் 3 ஆவது இடத்தில் யார் களமிறங்கி பேட்டிங் செய்வார்கள் என்பது குறித்த சந்தேகம் அதிக அளவில் எழுந்துள்ளது. மேலும் அந்த இடத்திற்கு ருதுராஜ் ஜெய்க்வாட் சரியாக இருப்பார் என்று கூறப்பட்ட நிலையில் அவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Raina

இதனால் சிஎஸ்கே நிர்வாகமும் சுரேஷ் ரெய்னாவிற்கு பதிலாக மாற்று வீரரை விரைவில் தேர்வு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தற்போது ரெய்னா அணியில் இருந்து வெளியேறியதால் மூன்றாவது இடத்தில் யார் களமிறங்க வேண்டும் என்பது குறித்து கௌதம் கம்பீர் தனது கருத்தினைத் தெரிவித்துள்ளார். அதன்படி அவர் கூறுகையில் : தோனி தன்னை நிரூபிக்க வேண்டிய சரியான நேரம் இது என்றும்அவருக்கு அந்த பொறுப்புகள் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

- Advertisement -

Dhoni 1

தோனி கடந்த ஒரு வருடமாக கிரிக்கெட்டை விட்டு வெளியே இருந்ததாகவும், எனவே தற்போது அவர் அதிக பந்துகளை எதிர்கொண்டு ஒரு சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் கம்பீர் இரண்டு முறை ஐ.பி.எல் கோப்பையை வென்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.