தோனி தலைமையில் சி.எஸ்.கே வெற்றி பெறவும், கோலி தலைமையில் பெங்களூரு தோற்கவும் இதுவே காரணம் – கம்பீர் பேட்டி

Gambhir
- Advertisement -

ஐபிஎல் தொடரில் வெற்றிகரமாக செயல்படும் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதே போல் இந்திய அணியின் கேப்டனாக இருக்கும் விராட் கோலியும் ராயல் சாலஞ்சர்ஸ் அணிக்கு கேப்டனாக இருந்து வருகிறார். இருவருமே இந்திய அணிக்காக தங்களது தலைமையின்கீழ் பல வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் ஐபிஎல் தொடரில் இருவருக்கும் மிகப் பெரிய வித்யாசம் இருக்கிறது.

Kohli

- Advertisement -

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பல தொடர்களில் வெற்றி பெற்று ஐபிஎல் தொடரில் பல சாதனைகள் படைத்துள்ளது. ஆனால் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் அணி அவரது தலைமையில் பெரிதாக எந்த வெற்றியையும் பெற்றது இல்லை ஒரே ஒரு முறை இறுதிப்போட்டி சென்றுள்ளது

கோப்பையை வெல்லும் என்று ஒவ்வொரு முறையும் எதிர்பார்ப்பார்கள் ஆனால் அது நடக்காது. இந்நிலையில் ஐபிஎல் தொடரில் தோனி மற்றும் விராட் கோலிக்கும் என்ன வித்தியாசம் என்பது குறித்து பேசியிருக்கிறார். முன்னால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் கவுதம் காம்பீர் அவர் கூறுகையில்….

விராத் கோலிக்கும் தோனிக்கும் ஐபிஎல் போட்டிகளில் மிகப் பெரிய வித்தியாசம் இருக்கிறது. தோனி பொருத்தவரையில் முதல் ஏழு போட்டிகளுக்கு தங்களது வீரர்களை மாற்றவே மாட்டார். பெரிதாக எந்த மாற்றமும் இருக்காது 7 முதல் 8 வீரர்கள் நிலைத்து நின்று அந்த அணியில் ஆடிக் கொண்டிருப்பார்கள் .தவறு செய்தாலும் இதுதான் அணியாக இருக்கும்.

Kohli

ஆனால், விராட் கோலி பொருத்தவரை முதல் 7-8 போட்டிகளில் அணியை மாற்றிக்கொண்டே இருப்பார். 3 வீரர்கள் மட்டுமே அந்த நிலையாக விளையாடிக் கொண்டிருப்பார்கள். இதன் காரணமாக தொடரின் முதல் பாதியிலேயே விராட் கோலியின் அணி நிலையில்லாத ஒரு அணியாக மாறிவிடுகிறது. விராட் கோலி இங்கு தான் தவறு செய்கிறார். முதல் பாதியில் தோற்றாலும் தொடர்ந்து நிலையான வீரர்களை ஆட வைக்க வேண்டும். இதுதான் தோனிக்கும் கோலிக்கும் வித்தியாசமே என்று தெரிவித்துள்ளார் கௌதம் கம்பீர்.

Advertisement