2011 உலகக்கோப்பையை வெல்ல தோனி மட்டும் காரணம் கிடையாது – கொதித்தெழுந்த கம்பீர்

Gambhir-1
- Advertisement -

தோனி தலைமையிலான இந்திய அணி கடந்த 2011-ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற உலகக்கோப்பை 50 ஓவர் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இலங்கை அணியை மும்பை வான்கடே மைதானத்தில் கடைசியாக வீழ்த்தி இன்றோடு ஒன்பது ஆண்டுகள் முடிவடைந்து விட்டது. எனவே இந்த நாளை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

yuvidhoni

- Advertisement -

எனவே ஒவ்வொரு ஆண்டும் இந்த உலகக்கோப்பை வெற்றி நாளை இந்திய ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். அதுவும் இலங்கை அணியை இறுதியாட்டத்தில் வீழ்த்த தோனி அடித்த அந்த கடைசி சிக்ஸர் எப்போதும் மறக்க முடியாத ஒன்றாக ரசிகர்களிடையே பிரசித்தம் பெற்ற ஒன்றாக உள்ளது.

இந்திய அணி இலங்கை அணியை வீழ்த்துவதற்கு முக்கிய காரணமாக இன்று வரை தோனியே பார்க்கப்பட்டு வருகிறார். ஆனால் அந்தப் போட்டியில் கம்பீர் அடித்த 97 ரன்கள் அடித்ததை யாரும் மறக்க முடியவில்லை என்றே கூறலாம்.

gambhir1

ஏனெனில் துவக்கத்தில் விக்கெட்டுகள் விழும்போது தடுமாறிய இந்திய அணியை தனது பொறுப்பான ஆட்டத்தின் மூலம் அடுத்து விக்கெட்டுகள் விழாத வண்ணம் விளையாடி அணியை வெற்றியை நோக்கி கொண்டுவந்தவர் கம்பீர். அதன் பின்னர் களமிறங்கிய தோனி ஆட்டமிழக்காமல் 91 ரன்கள் அடித்து இறுதிப்போட்டியில் ஆட்டநாயகனாக தேர்வானார்.

- Advertisement -

இந்நிலையில் தற்போது கிரிக்இன்போ இணையதளம் இறுதிப்போட்டியில் தோனி சிக்ஸர் அடித்த அந்த புகைப்படத்தை வெளியிட்டு இந்த ஷாட் மில்லியன் இந்திய ரசிகர்களை கொண்டாட வைத்தது என எழுதியுள்ளது. இதற்கு பதிலளித்த கம்பீர் : உலக கோப்பை ஒட்டுமொத்த இந்தியாவும் இந்திய அணிவீரர்களும், அணியின் பயிற்சியாளராகும் இணைந்துதான் வென்றார்கள்.

Gambhir

சிக்சர் மீதான உங்களது விருப்பத்தை கைவிட வேண்டும் என்று தன் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார். இதற்கான சரியான விமர்சனங்களையும் கம்பீர் வலைதளத்தில் பெற்று வந்தாலும் அவருக்கான ஆதரவு ரசிகர்களிடையே குவிந்து வருகிறது குறிப்பிடத்தக்கது.

Advertisement