இவருக்கு நிகரான ஆல்ரவுண்டர் இந்திய அணியில் இல்லை. சர்ச்சையான கருத்தினை கூறிய கம்பீர் – விவரம் இதோ

Gambhir
- Advertisement -

இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ். தற்போது உலகின் மிகச்சிறந்த வீரராக பார்க்கப்பட்டு வருகிறார். டெஸ்ட், டி20, ஒருநாள் என அனைத்துவிதமான போட்டிகளிலும் பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் என பட்டையை கிளப்பி வருகிறார். மேலும் உலகளவில் ஒரு தனித்துவமான வீரராக இருந்து வருகிறார்.

Stokes

- Advertisement -

நடைபெற்றுவரும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் கூட இரண்டு டெஸ்ட் போட்டியில் 12 விக்கெட் மற்றும் 360 ரன்கள் குவித்துள்ளார். இந்நிலையில் பென் ஸ்டோக்ஸ் குறித்து இந்திய முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் புகழ்ந்து பேசியுள்ளார். அவர் கூறுகையில்…

ஒரு ஆல்-ரவுண்டராக இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் பிரமாதமாக செயல்பட்டு வருகிறார். அவருடன் ஒப்பிட கூடிய அளவிற்கு இந்தியாவில் எந்த ஒரு வீரரும் தற்போது இல்லை. ஏனெனில் பென் ஸ்டோக்ஸ் ஒரு தனித்துவமான வீரர்.

Stokes

அவர் விளையாடும் விதத்தைப் பார்த்தால் இந்தியாவில் மட்டுமல்ல, உலக அளவில் எந்த ஒரு வீரரும் அவருக்கு பக்கத்தில் வந்து விட முடியாது. பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் என மூன்று துறையிலும் பட்டையை கிளப்புகிறார். ஒவ்வொரு வீரரும் தனது அணியில் இவர் போன்ற ஒரு வீரர் இருக்கவேண்டும் என்றுதான் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று கூறியுள்ளார் கௌதம் கம்பீர்.

Stokes

ஆனால் இந்திய அணியில் ஹார்டிக் பாண்டியா, ஜடேஜா ஆகிய தரமான ஆல்ரவுண்டர்கள் இருக்கையில் கம்பீர் கூறிய இந்த கருத்து சமூகவலைத்தளத்தில் சர்ச்சையாக மாறியுள்ளது. மேலும் கம்பீர் இப்படிக் கூறிக் கொண்டிருக்கையில் ஏற்கனவே இந்திய அணியின் முன்னாள் வீரரான இர்பான் பதான் இதே கருத்தினை கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement