இத்தனை வருடமாக இவர் கேப்டனாக இருந்து என்ன பண்ணிட்டாரு – கோலியை தாக்கி பேசிய முன்னாள் வீரர்

Rcb
- Advertisement -

ஐபிஎல் தொடர் கடந்த 12 வருடங்களாக இந்தியாவில் நடைபெற்று வருகிறது. மும்பை இந்தியன்ஸ் அணி நான்கு முறையும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை மூன்று முறையும் வெற்றி பெற்றிருக்கிறது. இதில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் விராட் கோலியின் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், அணி மூன்று முறை இறுதிப் போட்டிக்குச் சென்று இருக்கிறதே தவிர இதுவரை  கோப்பையை வென்றதில்லை.

rcb 2

- Advertisement -

விராட் கோலி 8வது முறை இந்த அணிக்கு கேப்டனாக இருக்கிறார். ஆனால் பெரிதாக எந்த ஒரு சாதனையையும் படைக்கவில்லை. இதன் காரணமாக கடந்த 12 வருடமாக ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் ரசிகர்கள் தவமாய் தவமிருந்து வருகிறார்கள். மேலும் இந்தியாவிற்காக சிறப்பாக கேப்டன்ஷிப் செய்யும் விராட் கோலி பெங்களூரு அணியில் மட்டும் பாரபட்சமாக இருக்கிறார் என்று பல முன்னாள் வீரர்களும் ரசிகர்களும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் முன்னாள் இந்திய வீரர் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் கவுதம் காம்பீர், விராட் கோலி குறித்து கடுமையாக தாக்கிப் பேசி இருக்கிறார்.

rcb

அவர் கூறுகையில் “பல வருடங்களாக பெங்களூரு அணிக்கு விராட் கோலி கேப்டனாக இருந்து வருகிறார். அந்த அணி இவரது தலைமையில் முன்னேற்றம் அடைந்ததாக தெரியவில்லை. இவரும் இதில் பெரிய ஈடுபாடு செலுத்தி விளையாடுவதில்லை.

இவரது காலகட்டத்தில் பெங்களூர் அணிக்கு எந்த ஒரு நல்ல விஷயமும் நடக்கவில்லை” என்று காட்டமாக தெரிவித்து இருக்கிறார் கௌதம் காம்பீர். இன்னும் சில தினங்களில் ஐபிஎல் தொடர் துவங்க இருக்கும் வேளையில் விராட் கோலியின் மீது விஷத்தை கக்கி இருக்கிறார் கவுதம் காம்பீர்.

Advertisement