- Advertisement -

இதெல்லாம் சகஜம்.. அதுக்காக அப்படியே போகாதீங்க.. பாண்டியா போன்ற இந்திய வீரர்களுக்கு கம்பீர் அறிவுரை

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக கௌதம் கம்பீர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 2007 மற்றும் 2011 உலகக் கோப்பைகளை இந்தியா வெல்வதற்கு முக்கிய பங்காற்றிய அவர் 2 ஐபிஎல் கோப்பைகளை கேப்டனாக வென்ற அனுபவத்தை கொண்டுள்ளார். அத்துடன் இந்த வருடம் ஆலோசகராக அவர் கொல்கத்தா அணி 10 வருடங்கள் கழித்து சாம்பியன் பட்டம் வெல்வதற்கு முக்கிய பங்காற்றினார்.

அதன் காரணமாக 2024 டி20 உலகக் கோப்பை வெற்றியுடன் விடைபெற்ற ராகுல் டிராவிட்டுக்கு பதிலாக அவர் புதிய பயிற்சியாளராக பொறுப்பேற்றுள்ளார். அந்த அறிவிப்பு நிறைய ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. ஏனெனில் நாட்டுப்பற்றுடன் விளையாடக்கூடிய கௌதம் கம்பீர் வெளிப்படையாக பேசி அதிரடியான முடிவுகளை எடுக்கக் கூடியவர்.

- Advertisement -

கம்பீர் அறிவுரை:
இந்நிலையில் கிரிக்கெட்டில் விளையாடும் அனைவருமே காயத்தை சந்திப்பது சகஜம் என்று கௌதம் கம்பீர் கூறியுள்ளார். எனவே அதை தவிர்ப்பதற்காக ஏதேனும் ஒரு வகையான கிரிக்கெட்டில் விளையாட மாட்டேன் என்று யாரும் சொல்லக்கூடாது என கம்பீர் கேட்டுக் கொண்டுள்ளார். குறிப்பாக ஹர்திக் பாண்டியா அடிக்கடி காயத்தை சந்திப்பதால் மொத்தமாக டெஸ்ட் கிரிக்கெட்டை புறக்கணித்துள்ளார்.

எனவே அவ்வாறு செய்யாமல் அனைத்து வீரர்களும் 3 கிரிக்கெட்டிலும் நாட்டுக்காக விளையாட வேண்டும் என்று கௌதம் கம்பீர் கேட்டுக் கொண்டுள்ளார். இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. ” காயங்கள் விளையாட்டு வீரர்கள் வாழ்க்கையின் ஒரு அங்கம். நீங்கள் 3 வகையான கிரிக்கெட்டிலும் விளையாடினால் காயத்தைச் சந்திப்பீர்கள்”

- Advertisement -

“இருப்பினும் காயத்திலிருந்து குணமடைந்த பின் நீங்கள் மீண்டும் அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் விளையாட வேண்டும். பொதுவாக நான் இவரை நாங்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட வைப்பதற்காக கண்டறிந்து வைத்துள்ளோம், காயத்தை கையாள்கிறோம், பனிச்சுமையை நிர்வகிக்கிறோம் என்று சொல்வதையும் நம்புபவன் அல்ல. ஏனெனில் இங்கே விளையாடும் அனைவருமே சிறிது காலம் மட்டுமே விளையாடுவார்கள்”

இதையும் படிங்க: இதான் இந்தியாவோட கேரக்டர்.. டி20 உ.கோ ஜெய்ச்ச அப்றம் விராட், ரோஹித் நெஞ்சை தொட்டுட்டாங்க.. லக்ஷ்மன் பாராட்டு

“எனவே குறிப்பிட்ட வருடங்கள் மட்டுமே விளையாடப் போகும் நீங்கள் நாட்டுக்காக உங்களால் முடிந்த வரை நிறைய விளையாட வேண்டும். குறிப்பாக நல்ல ஃபார்மில் இருக்கும் போது 3 வகையான கிரிக்கெட்டிலும் விளையாட வேண்டும்” என்று கூறினார். அந்த வகையில் இப்படி ஒரு கோட்பாட்டை வைத்துள்ள கௌதம் கம்பீர் விரைவில் ஹர்திக் பாண்டியாவை டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட வைக்கவும் வாய்ப்புள்ளது என்று சொல்லலாம்.

- Advertisement -