விருது வாங்குன பிளேயரை ட்ராப் பண்ற பரிதாபம் நம்ம டீம்’ல தான் நடக்கும்.. இந்திய அணி நிர்வாகத்தை விமர்சித்த கம்பீர்

- Advertisement -

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்று முடிந்த 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 1 – 1 என்ற கணக்கில் இந்தியா சமன் செய்தது. குறிப்பாக ஜோஹன்ஸ்பர்க் நகரில் நேற்று நடைபெற்ற கடைசி போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா கேப்டன் சூரியகுமார் யாதவ் 100, ஜெய்ஸ்வால் 60 ரன்கள் எடுத்த உதவியுடன் 202 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

அதை சேசிங் செய்த தென்னாப்பிரிக்கா ஆரம்பம் முதலே தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்தி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து 95 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி தோல்வியை சந்தித்து தொடரை வெல்லும் வாய்ப்பை நழுவ விட்டது. அந்த அணிக்கு அதிகபட்சமாக டேவிட் மில்லர் 35 ரன்கள் எடுக்க இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.

- Advertisement -

கம்பீர் அதிருப்தி:
அந்த வகையில் முதல் போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில் 2வது போட்டியில் வென்ற தென்னாப்பிரிக்காவை 3வது போட்டியில் தோற்கடித்த இந்தியா கோப்பையை பகிர்ந்து கொண்டது. முன்னதாக விராட் கோலி போன்ற மூத்த வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு 2024 டி20 உலகக் கோப்பைக்கு தேவையான இளம் வீரர்களை கண்டறிவதற்காக நடைபெற்ற இத்தொடரில் ரவி பிஷ்னோய் ஒரு போட்டியில் கூட வாய்ப்பு பெறாதது ஆச்சரியமாக அமைந்தது.

ஏனெனில் சமீபத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் 9 விக்கெட்டுகளை எடுத்த அவர் 4 – 1 என்ற கணக்கில் இந்தியா கோப்பையை வெல்வதற்கு முக்கிய பங்காற்றி தொடர் நாயகன் விருது வென்று ஐசிசி டி20 தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் பவுலராகவும் முன்னேறி சாதனை படைத்தார். இந்நிலையில் கடந்த தொடரில் தொடர் நாயகன் விருது வென்ற வீரரை இத்தொடரில் நீக்கிய பரிதாபம் இந்திய அணியில் மட்டுமே நிகழும் என்று கௌதம் கம்பீர் விமர்சித்துள்ளார்.

- Advertisement -

இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “ரவி பிஷ்னோய் சற்று வேகமாக வீசக்கூடியவர் என்பதால் தேர்வு செய்யப்படவில்லை என்று நினைக்கிறேன். இருப்பினும் உங்களிடம் ஒரே நேரத்தில் இடது கை ரிஸ்ட் மற்றும் வலது கை ரிஸ்ட் ஸ்பின்னர் இருக்கிறார்கள். இதை விட எதிரணியை அட்டாக் செய்வதற்கான சுழல் பந்து வீச்சு ஜோடி இருக்க முடியாது”

இதையும் படிங்க: தென்னாப்பிரிக்க அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் இருந்து விலகவுள்ள நட்சத்திர இந்திய வீரர் – வெளியான தகவல்

“குறிப்பாக பவர் பிளே ஓவர்களில் நீங்கள் லெக் ஸ்பின்னர்களை தான் நம்பி விக்கெட்டுகளை எடுக்க பயன்படுத்த முடியும். அதிலும் ஜோஹன்ஸ்பர்க் போன்ற மைதானத்தில் பிஷ்னோய் விளையாடாதது ஆச்சரியமாகும். என்னைக் கேட்டால் நீங்கள் தொடர் நாயகன் விருதை வெல்லக்கூடாது. ஏனெனில் அது தான் உங்களை அணியிலிருந்து நீக்குவதற்கான முதல் காரணியாக இருக்கிறது” என்று நகைச்சுவையுடன் பேசினார்.

Advertisement