தென்னாப்பிரிக்க அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் இருந்து விலகவுள்ள நட்சத்திர இந்திய வீரர் – வெளியான தகவல்

IND-vs-RSA
- Advertisement -

தென்னாப்பிரிக்க நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது அந்நாட்டு அணிக்கு எதிராக நடைபெற்று வரும் மூன்று வகையான கிரிக்கெட் தொடரிலும் பங்கேற்று விளையாடி வருகிறது. அந்த வகையில் நடைபெற்று முடிந்த மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இரண்டு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்று தொடரை சமன் செய்துள்ளனர்.

அதனை தொடர்ந்து கே.எல் ராகுல் தலைமையிலான இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. அதற்கு அடுத்து ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் பங்கேற்று விளையாட இருக்கிறது.

- Advertisement -

இந்த 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது டிசம்பர் 26-ஆம் தேதி முதல் ஜனவரி 7-ஆம் தேதி வரை நடைபெற உள்ள வேளையில் இந்த தொடருக்கான 16 பேர் கொண்ட இந்திய அணியில் இருந்து முன்னணி வீரர் ஒருவர் விலக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அந்த வகையில் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி இந்த டெஸ்ட் தொடரிலிருந்து விலக இருப்பதாக கூறப்படுகிறது. ஏனெனில் 50 ஓவர் உலகக் கோப்பை தொடரின்போது கணுக்காலில் காயமடைந்த அவர் அந்த காயத்துடனே உலகக் கோப்பை முழுவதும் விளையாடி இருந்ததாக தெரிவித்திருந்தார்.

- Advertisement -

இந்நிலையில் தற்போது அந்த காயத்திற்கு சிகிச்சை எடுத்து வரும் முகமது ஷமி இன்னும் பூரண குணமடையவில்லை என்பதனால் தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணத்தை தவறவிடுவார் என்று தெரிகிறது.மேலும் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க : நாங்க நெனச்சது நடந்ததில் சந்தோசம்.. தெ.ஆ அணிக்கெதிரான டி20 தொடரினை சமன் செய்த பிறகு – சூரியகுமார் யாதவ் பேட்டி

இந்த டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா இன்று ஜோகன்னஸ்பர்க் நகருக்கு செல்ல இருக்கிறார். அதனைத்தொடர்ந்து விராட் கோலி, ஜஸ்ப்ரீத் பும்ரா, ரவிச்சந்திரன் அஷ்வின், நவ்தீப் சைனி ஆகியோர் துபாய் வழியாக தென்னாப்பிரிக்க நாட்டிற்கு செல்லவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement