அவரை மட்டும் அவுட்டாக்கிட்டா போதும். இந்திய அணியின் வெற்றி உறுதி – கவுதம் கம்பீர் கருத்து

gambhir
- Advertisement -

டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் தங்களது முதலாவது போட்டியில் இன்று இந்திய அணி மெல்போர்ன் மைதானத்தில் பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ள இருக்கிறது. இந்த போட்டியில் கடந்த ஆண்டு அடைந்த தோல்விக்கு பழி தீர்க்கும் விதமாக இம்முறை இந்திய அணியானது தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த காத்திருக்கிறது. ஏற்கனவே இந்த போட்டி குறித்து பல்வேறு வீரர்களும் பல்வேறு கருத்துக்களை கூறியிருந்தனர்.

INDvsPAK

- Advertisement -

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான கவுதம் கம்பீர் இன்றைய போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்துவதற்கான திட்டம் குறித்து பேசி உள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் : இந்த உலகக் கோப்பை தொடரில் அனைத்து அணிகளை விடவும் பாகிஸ்தான் அணி பந்துவீச்சில் சிறப்பான அணி என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் அவர் கூறுகையில் : பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர்களால் 140 கிலோ மீட்டருக்கும் அதிகமான வேகத்தில் பந்து வீச முடியும். அவர்களின் பலமே வேகப்பந்துவீச்சு மட்டும்தான். ஷாஹீன் அப்ரிடி, ஹாரிஸ் ரவுப் மற்றும் நசிம் ஷா ஆகிய மூவரும் 140 க்கும் மேல் பந்து வீசுவார்கள்.

Babar Azam

அவர்களுடைய பலமே வேகப்பந்து வீச்சு தான். இருப்பினும் அவர்களிடம் இருக்கும் ஒரு பலவீனம் பேட்டிங் வரிசை தான். ஏனெனில் துவக்க வீரர்கள் சரியாக விளையாடவில்லை என்றால் அவர்களின் மிடில் ஆர்டர் ஆட்டம் காணும். பாகிஸ்தான் அணியிடம் தற்போது நல்ல பவர் ஹிட்டர்கள் இல்லை. மேலும் ஷார்ட் பிட்ச் பந்துகளுக்கு எதிராக அவர்களால் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாது.

- Advertisement -

ஏனெனில் ஆஸ்திரேலியாவில் உள்ள மைதானங்கள் அளவில் மிகவும் பெரியவை என்பதனால் அவர்களால் பவுண்டரி அடிப்பது கடினம். அதனை சரியாக பயன்படுத்தி பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமை விரைவில் வீழ்த்தினால் இந்த போட்டியில் நிச்சயம் இந்திய அணி வெற்றி பெறும்.

இதையும் படிங்க : டி20 உலக கோப்பை வரலாற்றில் விளாசப்பட்டுள்ள டாப் 5 பிரம்மாண்ட சிக்ஸர்களின் பட்டியல் – யுவி எந்த இடம்னு பாருங்க

பாகிஸ்தானுக்கு உள்ள பலவீனமே பேட்டிங் ஆர்டர் தான் என்றும் அதனை ஆரம்பத்திலேயே முறித்தால் நிச்சயம் இந்திய அணிக்கு வெற்றி கிடைக்கும் என்றும் கவுதம் கம்பீர் கூறியது குறிப்பிடத்தக்கது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இந்த போட்டி இன்று மெல்போர்ன் மைதானத்தில் இன்னும் சில மணி நேரங்களில் துவங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement