- Advertisement -
ஐ.பி.எல்

சுனில் நரேன் உடனான முதல் சந்திப்பு இப்படித்தான் நடந்தது.. சுவாரசிய தகவலை பகிர்ந்த – கவுதம் கம்பீர்

இந்தியாவில் நடைபெற்று முடிந்த 17-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது பேட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதோடு ஐபிஎல் தொடரில் மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தையும் வென்று அசத்திய அந்த அணிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

இந்த தொடருக்கு முன்னதாக லக்னோ அணியின் மென்டாராக இருந்த கௌதம் கம்பீரை கொல்கத்தா அணி தங்களது அணிக்கு ஆலோசகராக கொண்டு வந்தது. அவர் வந்ததிலிருந்து அணியில் சில குறிப்பிட்ட மாற்றங்கள் நிகழ்த்தப்பட்டு கொல்கத்தா அணி பலமாக இந்த தொடரில் ஆதிக்கத்தை செலுத்தியது.

- Advertisement -

இதன் காரணமாக இந்த தொடரின் வெற்றிக்கு கம்பீரும் ஒரு முக்கிய காரணம் என பலரும் பாராட்டி வருகின்றனர். ஏனெனில் சுனில் நரேனை மீண்டும் துவக்க வீரராக களமிறக்க ஐடியா கொடுத்ததே கம்பீர் தான் என்றும் அணியில் மேலும் பல மாற்றங்களை அவர் நிகழ்த்தி இருந்தார் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த ஆண்டு மிகச் சிறப்பான ஆட்டத்தை பந்துவீச்சு மற்றும் பேட்டிங் என இரண்டிலுமே வெளிப்படுத்திய சுனில் இந்த தொடரின் தொடர் நாயகன் விருதினை வென்று அசத்தியிருந்தார். கொல்கத்தா அணியின் வெற்றிக்கு இவரது பங்களிப்பும் அபரிவிதமான ஒன்று என்றால் அது மிகையல்ல. இந்நிலையில் சுனில் நரைனை தான் முதல் முறையாக சந்தித்தது குறித்து தற்போது கௌதம் கம்பீர் வெளிப்படையாக சில சம்பவங்களை பகிர்ந்துள்ளார்.

- Advertisement -

இது குறித்து அவர் கூறுகையில் : 2012 ஆம் ஆண்டு முதல் முறையாக சுனில் நரேன் கொல்கத்தா அணிக்காக முதல் முறையாக தேர்வு செய்யப்பட்டார். அப்போது நாங்கள் ஜெய்ப்பூரில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தோம். அங்குள்ள ஒரு காபி ஷாப்பில் மதிய உணவு சாப்பிட முடிவு செய்தேன். அப்போது சுனில் நரேனையும் அங்கு வருமாறு அழைத்தேன். அப்போது அவர் என்னிடம் ஒரு வார்த்தை கூட பேசாமல் மிகவும் வெட்கப்பட்டார்.

இதையும் படிங்க : விராட் கோலி, சாம்சனை வைத்து இந்த மாற்றத்தை செஞ்சா டி20 உ.கோ ஜெய்க்கலாம்.. ஆர்பி சிங் ஐடியா

எனினும் அதற்கு பிறகு என்னிடம் முதல் வார்த்தையாக : ஐபிஎல் தொடரை பார்க்க எனது காதலியை அழைத்து வரலாமா? என்று கேட்டார். அப்போது ஆரம்பித்த நட்பு இன்று 12 ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது. நாங்கள் ஒரு சகோதரர் போல பழகி வருகிறோம். எந்த நேரத்திலும் தொலைபேசியில் பேசிக்கொள்ளும் அளவிற்கு இருக்கிறோம் என கம்பீர் கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -