சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியின் விக்கெட் கீப்பர் யார்? தெளிவான பதிலளித்த – கவுதம் கம்பீர்

Gautam Gambhir 3
- Advertisement -

இங்கிலாந்து அணிக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை இந்திய அணியானது மூன்றுக்கு பூஜ்யம் (3-0) என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. அதனைத் தொடர்ந்து எதிர்வரும் சாம்பியன்ஸ் டிராபி தொடரை கைப்பற்றும் முனைப்புடன் துபாய் பயணிக்க உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணியில் நட்சத்திர வீரர்கள் பலரும் இடம்பெற்றுள்ளதால் இந்த தொடர் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் யார்?

இந்நிலையில் எதிர்வரும் இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மனாக கே.எல் ராகுல் விளையாடுவாரா? அல்லது ரிஷப் பண்ட் விளையாடுவாரா? என்பது குறித்த கேள்வி அனைவரது மத்தியிலும் அதிகரித்துள்ளது.

- Advertisement -

ஏனெனில் இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் கே.எல் ராகுலே விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக செயல்பட்டதால் அவரே நீடிப்பார் என்றும் தெரிகிறது. இந்நிலையில் இது குறித்த கேள்விக்கு தெளிவான பதிலளித்த இந்திய அணியின் பயிற்சியாளரான கவுதம் கம்பீர் கூறுகையில் :

தற்போதைய ஒருநாள் இந்திய அணியில் முதன்மை விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ராகுல் தான். ஆனாலும் பண்ட்டிற்கு வாய்ப்பு கிடைக்கும். தற்போது கே.எல் ராகுல் சிறப்பாக செயல்பட்டு வருவதால் இரண்டு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களை அணியில் வைக்க முடியாது. கே.எல் ராகுல் ஆறாவது இடத்தில் களமிறங்கி மிகச் சிறப்பாக விளையாடி வருகிறார்.

- Advertisement -

எனவே அவர்தான் முதன்மை விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்று கம்பீர் தெளிவான பதில் அளித்தார். மேலும் ஒரு சில போட்டிகளில் கே.எல் ராகுல் ஆறாவது பேட்ஸ்மேனாக களமிறங்க வைக்கப்பட்டு அவருக்கு முன்னதாக அக்சர் பட்டேல் களமிறங்கியது குறித்து பேசிய அவர் கூறுகையில் : முதல் ஐந்து வீரர்களும் வலது கை பேட்ஸ்மேன்களாக இருக்க வேண்டுமா என்ன? புள்ளி விவரங்களை பார்க்காதீர்கள்.

இதையும் படிங்க : தயவுசெய்து என்னை அப்படி கூப்பிடாதீங்க.. ரசிகர்களுக்கு அன்பு கட்டளையிட்ட பாபர் அசாம் – விவரம் இதோ

அவர்களது செயல்பாடு எவ்வாறு இருக்கிறது என்பதை பாருங்கள். அணிக்கு என்ன தேவையோ அதைத்தான் நாங்கள் செய்து வருகிறோம். அக்சர் பட்டேல் முன்கூட்டியே இறங்கிய இரண்டு போட்டிகளிலும் சிறப்பாக விளையாடினார். ஆனால் சூழலுக்கு ஏற்ப பேட்டிங் ஆர்டர் சற்று மாற்றப்படும் என்றும் கம்பீர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement