ஐபில்-ல கிறிஸ் மோரிசை இப்படிதான் பயன்படுத்துவேன்…கவுதம் கம்பீர் – காரணம் இதுதான் !

- Advertisement -

இருமுறை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக ஐபிஎல் கோப்பையை பெற்றுத்தந்த கவுதம் கம்பீர் இம்முறை டெல்லி அணிக்காக விளையாடவுள்ளார். இம்முறை கவுதம் கம்பீரை ஏலத்தில் எடுத்த டெல்லி அணி அவரையே அந்த அணியின் புதிய கேப்டனாகவும் நியமித்துள்ளது.

gautam

- Advertisement -

ஐபிஎல்-இன் மிகச்சிறந்த கேப்டன்களில் ஒருவரான கவுதம் கம்பீர் இந்த வருட ஐபிஎல்-இல் தன்னுடைய அணியினரை எப்படியெல்லாம் பயன்படுத்துவது என்று பல திட்டங்களை வகுத்து வருகின்றார்.அந்த வகையில் இந்த வருடம் டெல்லி அணிக்காக விளையாடவுள்ள தென்ஆப்பிரிக்க ஆல்ரவுண்டரான கிறிஸ் மோரிஸை எப்படி இந்த ஐபிஎல்-இல் கம்பீர் பயன்படுத்த போகிறார் என்பதை தற்போது தெரிவித்துள்ளார்.

கம்பீர் கொல்கத்தா அணியிலிருந்தபோது மேற்கிந்திய தீவுகள் வீரரான ஆண்ட்ரு ரஸ்ஸலை பல நேரங்களில் சரியாக பயன்படுத்தினார். இம்முறை டெல்லி அணியிலும் கிறிஸ் மோரிஸை அதேபாணியில் தான் பயன்படுத்த போகின்றாராம்.ஆம் ஆண்ட்ரு ரஸ்ஸலுடன், கிறிஸ் மோரிஸை ஒப்பிட்டு பேசியுள்ள கவுதம் கம்பீர் இரு வீரர்களுமே மிகச்சிறந்த ஆல்ரவுண்டர்கள் என்கிறார்.

ChristopherMorris

மேலும் கொல்கத்தா அணியில் இருந்த போது ரஸ்ஸலை பயன்படுத்தியதை விடவும் சிறப்பாக கிறிஸ் மோரிசை பயன்படுத்திட தன்னிடம் திட்டம் உள்ளது என்றும் கூறியுள்ளார்.ரஸ்ஸலை பொறுத்தவரையிலும் மிகச்சிறப்பாக பேட்டிங் செய்தாலும் பந்துவீச்சின் போது சற்று மெதுவாக வீசுபவர். ஆனால் அவரோடு ஒப்பிடுகையில் கிறிஸ் மோரிஸ் வேகமாக பந்து வீசுபவர் ஆனால் ரஸ்ஸல் அளவிற்கு ஆக்ரோஷ ஆட்டக்காரர் இல்லை.

ஆனாலும் கிறிஸ், ரஸ்ஸல் அளவிற்கு பேட்டிங் செய்யவில்லை என்றாலும் அவரை பயன்படுத்தியதை விட பந்துவீச்சிலும் பேட்டிங்கிலும் அதைவிட சிறப்பாக விளையாட வைத்து அணியின் துருப்பு சீட்டாக பயன்படுத்திடுவேன் என்று கூறியுள்ளார் டெல்லி அணியின் கேப்டனான கவுதம் கம்பீர்.வரும் ஏப்ரல் 7ம் தேதி முதல் ஐபிஎல் போட்டி தொடங்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement