அவர மட்டும் ஏன் பாராட்டுறீங்க? ஜஹீர் கான், யுவி, ரெய்னாலாம் உங்க கண்ணுக்கு தெரியலயா – நேரலையில் கொந்தளித்த கம்பீர்

- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டின் புதிய சாம்பியனை தீர்மானிக்கப் போகும் 2023 உலகக் கோப்பை தொடரில் சொந்த மண்ணில் வலுவான அணியாக கிரிக்கெட் திகழும் இந்தியா 2011 போல கோப்பையை வென்று கடந்த 10 வருடங்களாக ஐசிசி தொடர்களில் சந்தித்து வரும் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்குமா என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது. முன்னதாக 2011ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பையில் கங்குலி உருவாக்கிய சீனியர் வீரர்களையும் தாம் ஆதரவளித்து வளர்த்த விராட் கோலி, சுரேஷ் ரெய்னா, அஸ்வின் போன்ற இளம் வீரர்களையும் வைத்து அபாரமாக கேப்டன்ஷிப் செய்து எம்எஸ் தோனி 28 வருடங்கள் கழித்து இந்தியாவுக்கு உலக கோப்பையை வென்று கொடுத்தார்.

worldcup

- Advertisement -

அந்த தொடர் முழுவதும் அபாரமாக செயல்பட்ட யுவராஜ் சிங் தொடர் நாயகன் விருதை வென்ற நிலையில் சச்சின், சேவாக், விராட் கோலி, சுரேஷ் ரெய்னா போன்றவர்கள் பேட்டிங் துறையிலும் முனாப் படேல், ஹர்பஜன் சிங், ஜாகிர் கான், அஸ்வின், ஆஷிஷ் நெஹ்ரா போன்றவர்கள் பவுலிங் துறையிலும் சிறப்பாக செயல்பட்டு வெற்றியின் முக்கிய பங்காற்றினர். இருப்பினும் அந்த தொடர் முழுவதும் கேப்டன்ஷிப்பில் அசத்திய தோனி பேட்டிங்கில் சுமாராக செயல்பட்டு வந்த நிலையில் முக்கியமான ஃபைனலில் முரளிதரன எதிர்கொள்வதற்காக யுவராஜுக்கு முன்பாக களமிறங்கி 91* ரன்கள் அடித்து வெற்றி பெற வைத்தார்.

கொந்தளித்த கம்பீர்:
குறிப்பாக 97 ரன்கள் அடித்த கெளதம் கம்பீருடன் சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்து நங்கூரமாக விளையாடிய அவர் சிக்சருடன் அற்புதமான ஃபினிஷிங் கொடுத்து கோப்பையை வென்றதால் ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார். அப்படி ஃபைனலில் ஆட்டநாயகன் விருது வென்ற காரணத்தாலும் கேப்டனாக இருப்பதாலும் 2011 உலகக்கோப்பை என்றாலே அனைவரது நினைவுக்கு முதலாவதாக தோனியின் பெயர் நினைவு வந்து அவரையே பாராட்டவும் செய்கிறார்கள்.

MS Dhoni 2011 World Cup SIx

ஆனாலும் நான் ஒற்றை கையில் உலகக் கோப்பையை வென்று கொடுத்தேன் என்று எப்போதுமே தோனி சொல்லாத போதிலும் அவர் மட்டும் வென்றாரா என ஹர்பஜன் சிங், யுவராஜ் சிங், கௌதம் கம்பீர் போன்ற நிறைய முன்னாள் வீரர்கள் இன்னும் வன்மமாக பேசி வருகிறார்கள். அந்த வரிசையில் தோனி மட்டும் 2011 உலக கோப்பையை வென்று கொடுத்தாரா என்று மீண்டும் கெளதம் கம்பீர் நேரலை பேட்டியில் இத்தனை வருடங்கள் கழித்தும் கொஞ்சமும் மாறாமல் கொந்தளிப்பாக பேசியுள்ளார். அந்த பேட்டியில் அவர் கோபமாக பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“நான் சதமடித்தேனா இல்லையா என்பது முக்கியமல்ல. இந்தியா உலகக்கோப்பை வென்றதா என்பதே முக்கியமாகும். இங்கே நாம் சொந்த சாதனைகளுக்காக விளையாடுவதில்லை. எனவே கிரிக்கெட்டில் அணி வென்றால் மட்டுமே சொந்த நபரின் சாதனைகள் முக்கியமாகும். எனவே அந்த இன்னிங்ஸ் (97) இந்தியாவின் வெற்றிக்கு உதவியதால் என்னை பொறுத்த வரை முக்கியமாகும்”

Gambhir

“இங்கே நான் ஒன்றை நேரடியாக சொல்ல விரும்புகிறேன் அதாவது நான் குறைந்த ரன்களில் அவுட்டாகி இந்தியா வென்றிருந்தால் மகிழ்ச்சியடைந்திருப்பேன். ஆனால் நான் 100 ரன்கள் அடித்து இந்தியா தோற்றால் அதில் எந்த பயனுமில்லை. இருப்பினும் இந்தியாவில் பலர் சொந்த நபரின் சாதனைகளை கொண்டாடுகின்றனர். 2011 உலகக்கோப்பை வெற்றியில் தன்னுடைய உடல் நலத்தையும் பொருட்படுத்தாமல் விளையாடிய யுவராஜ் சிங்கை நாம் கொண்டாடினோமா? ஜாகிர் கானின் ஓப்பனிங் ஸ்பெல்லை கொண்டாடினோமா? ஏனெனில் அவர் ஃபைனலில் 4 தொடர்ச்சியான மெய்டன் ஓவர்களை வீசினார்”

- Advertisement -

“ஆனாலும் அவருக்கு நாம் பாராட்டுக்களை இன்னும் தெரிவிக்கவில்லை. அதே போல சச்சினின் உழைப்பை கொண்டாடினோமா? அவரை நாம் தோளில் சுமந்து கொண்டாடினோம். ஆனால் அந்த உலகக் கோப்பையில் அவர் தான் அதிக ரன்கள் அடித்தார் என்பது எத்தனை பேருக்கு நினைவிருக்கும். அதே போல பாகிஸ்தானுக்கு எதிராக ஹர்பஜன் பவுலிங், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ரெய்னாவின் இன்னிங்ஸ் போன்றவை வெற்றியில் முக்கிய பங்காற்றின”

இதையும் படிங்க:தோனியின் கீழ் ஆஸி மாதிரி இருந்த இந்தியன் டீம், இப்போ 5 விக்கெட் விழுந்தா காலி – தற்போதைய நிலையை விமர்சித்த முன்னாள் பாக் வீரர்

“எனவே ஃபைனலில் தோனி இன்னிங்ஸை கொண்டாடும் நாம் மற்றவர்களையும் கொண்டாட வேண்டும். ஏனெனில் ஒருவரின் ஒரு இன்னிங்ஸ் இந்தியாவுக்கு கோப்பையை கொடுக்காது. இருப்பினும் சமூக வலைதளங்களில் ஒரு தலைபட்சமாக தவறாக கொண்டாடுகிறார்கள். அதனால் தோனியை கொண்டாடும் நீங்கள் அந்த வெற்றியில் பங்காற்றிய இதர வீரர்களையும் கொண்டாட வேண்டும்” என்று கூறினார்.

Advertisement