இரட்டை சதமடிச்ச அவர் ரொம்ப மோசம், இப்படி விளையாடினால் எப்படி ஜெயிக்க முடியும் – இளம் வீரர்களை வெளுத்து வாங்கிய கம்பீர்

gambhir
- Advertisement -

நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற வரும் டி20 தொடரின் முதல் போட்டியில் முக்கிய நேரங்களில் சொதப்பி தோற்ற இந்தியா 2வது போட்டியில் கடுமையாக போராடி 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்று 1 – 1* (3) என்ற கணக்கில் சமன் செய்துள்ளது. குறிப்பாக லக்னோவில் நடைபெற்ற 2வது போட்டியில் சுழலுக்கு சாதகமாக அமைந்த ஆடுகளங்களில் இரு அணியும் தடுமாறிய நிலையில் பந்து வீச்சில் நியூசிலாந்தை 99 ரன்களுக்கு கட்டுப்படுத்திய இந்தியா இந்தியா அதை சேசிங் செய்ய கடைசி ஓவர் வரை போராடி வெற்றி கண்டது. அதனால் இந்திய அணி நிம்மதி பெருமூச்சு விட்டாலும் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.

IND vs NZ Hardik Pandya

- Advertisement -

ஏனெனில் 2022 ஆசிய மற்றும் டி20 உலக கோப்பையில் தோல்வியை சந்திக்க முக்கிய காரணமாக இருந்த ரோகித் சர்மா உள்ளிட்ட சீனியர்களை கழற்றி விட்டு 2024 டி20 உலக கோப்பைக்கு முன்பாக இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்த புதிய அணியை உருவாக்கும் வேலையை பிசிசிஐ துவங்கியுள்ளது. அந்த நிலைமையில் அழுத்தமற்ற போட்டிகளில் வழக்கம் போல அசத்தி வெற்றி காணும் இளம் வீரர்கள் அழுத்தமான போட்டிகளில் திண்டாடு போது மீண்டும் சீனியர்களே வந்து காப்பாற்ற வேண்டிய நிலைமை ஏற்படுகிறது.

விளாசிய கம்பீர்:
எடுத்துக்காட்டாக ராஞ்சியில் நடைபெற்ற முதல் போட்டியிலும் லக்னோவில் நடைபெற்ற 2வது போட்டியிலும் சுப்மன் கில், இஷான் கிசான், ராகுல் திரிபாதி ஆகிய இளம் கிரிக்கெட் வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி இந்தியாவுக்கு பெரிய பின்னடைவை கொடுத்தனர். அந்த 2 போட்டிகளிலும் சூரியகுமார் யாதவ் – ஹர்திக் பாண்டியா ஆகியோர் தான் நங்கூரமாக நின்று வெற்றிக்கு போராடினார்கள். அதிலும் குறிப்பாக தடவலாக செயல்பட்ட ராகுலுக்கு பதிலாக வாய்ப்பு பெற்ற இசான் கிசான் கடந்த மாதம் வங்கதேச மண்ணில் அடித்த இரட்டை சதத்துக்கு பின் இதுவரை ஒரு போட்டியில் கூட அசத்தலாக செயல்படவில்லை.

மாறாக ராகுலை மிஞ்சும் வகையில் டி20 கிரிக்கெட்டில் மிகவும் மெதுவாக விளையாடும் அவர் கடந்த 13 டி20 போட்டிகளில் ஒரு அரை சதம் கூட அடிக்கவில்லை. இந்நிலையில் டி20 கிரிக்கெட்டில் இளம் வீரர்கள் அதிரடியாக விளையாடாமல் பின்னடைவு ஏற்படுத்துவது ஏமாற்றத்தை கொடுப்பதாக தெரிவிக்கும் கௌதம் கம்பீர் இரட்டை சதமடித்த பின் இசான் கிசான் படு மோசமாக செயல்பட்டு வருவதாக விமர்சித்துள்ளார். இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“இது இந்திய பேட்டிங் துறை சுழல் பந்து வீச்சுக்கு எதிராக தடுமாறுவதை காட்டுகிறது. அந்த சூழ்நிலையில் தப்புவதற்கான திறமை அவர்களிடம் இல்லாதது தெரிகிறது. இது போன்ற சூழ்நிலைகளில் பெரிய சிக்சர்களை அடிப்பது எளிதாகும். ஆனால் தொடர்ந்து ஸ்ட்ரைக்கை மாற்றுவது கடினமாகும். இப்போட்டியில் ஸ்பின்னர்களுக்கு போதுமான ஆதரவு இருந்தது. குறிப்பாக முதல் போட்டியில் மைக்கேல் பிரஸ்வெலுக்கு எதிராக இசான் கிசான் அவுட்டானதில் அது தெளிவாக தெரிந்தது. என்னை கேட்டால் இந்த இளம் வீரர்கள் எப்படி விரைவாக ஸ்ட்ரைக்கை மாற்ற வேண்டும் என்பதை பற்றி கற்றுக் கொள்ள வேண்டும்”

Gambhir

“ஏனெனில் இது போன்ற பிட்ச்சில் உங்களால் நேராக சிக்சர்களை அடிப்பது மிகவும் கடினமாகும். அத்துடன் வங்கதேசத்துக்கு எதிராக இரட்டை சதமடித்த பின்பு கிசான் கிசான் தடுமாறுவது எனக்கு மிகப்பெரிய ஆச்சரியமாக உள்ளது. அந்த இன்னிங்ஸ்க்கு பின் அவரது வளர்ச்சி அதிகரிக்கும் என்று எதிர்பார்த்த நமக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது”

இதையும் படிங்க: ஜஸ்பிரித் பும்ராவால் ஷாஹீன் அப்ரிடியை நெருங்க கூட முடியாது – முன்னாள் பாக் வீரர் அதிரடி பேட்டி

“எனவே அவர் இன்னும் சுழல் பந்து வீச்சை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதில் பயிற்சி எடுக்க வேண்டும். ஏனெனில் அடுத்து வரும் போட்டிகளில் அவர் களமிறங்கும் போது முதல் 6 ஓவர்களிலேயே ஸ்பின்னர்களை எதிரணிகள் பயன்படுத்துவார்கள். அத்துடன் அவர் வேகப்பந்து வீச்சை எளிதாக எதிர்கொள்கிறார். எனவே சுழல் பந்து வீச்சில் முன்னேற்றத்தைக் கண்டால் அவருக்கு குறிப்பாக டி20 கிரிக்கெட்டில் அதிக நன்மைகள் ஏற்படும்” என்று கூறினார்.

Advertisement