இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து ராகுல் டிராவிட் விலகியதை தொடர்ந்து புதிய பயிற்சியாளராக கௌதம் கம்பீர் நியமிக்கப்பட்டார். அவரது பயிற்சியின் கீழ் இந்திய அணி டி20 கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு வந்தாலும் டெஸ்ட் போட்டிகளில் சற்று நிலையான செயல்பாட்டை வெளிப்பாடாததால் டெஸ்ட் போட்டிகளுக்காக தனி பயிற்சி பயிற்சியாளரை நியமிக்க வேண்டும் என்ற கருத்துக்களும் ஆரம்பத்தில் இருந்து வந்தன.
நாடு திரும்பிய கவுதம் கம்பீர் :
ஏற்கனவே நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை சொந்த மண்ணில் இழந்த இந்திய அணியானது தற்போது ஆஸ்திரேலிய நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வேளையில் இந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடர் இந்திய அணியின் வீரர்களுக்கு மட்டுமின்றி பயிற்சியாளராக கவுதம் கம்பீருக்கும் மிக முக்கியமான தொடராக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி பெர்த் நகரில் நடைபெற்று முடிந்த வேளையில் அந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று அசத்தியுள்ளது. இன்னும் இந்த தொடரில் எஞ்சியுள்ள நான்கு ஆட்டங்களில் மூன்று ஆட்டங்களில் இந்திய அணி வெற்றி பெற்றால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு நேரடியாக தகுதி பெரும் வாய்ப்பு உள்ளது.
இதன் காரணமாக இந்த தொடரானது மிக முக்கிய தொடராக மாறியுள்ள வேளையில் தற்போது முதல் போட்டி முடிந்த கையோடு கவுதம் கம்பீர் நாடு திரும்பியுள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதற்கு காரணம் யாதெனில் :
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக 10 நாட்கள் இடைவெளி உள்ளது. டிசம்பர் 6-ஆம் தேதி அடிலெய்டு மைதானத்தில் தான் அடுத்த போட்டி நடைபெற உள்ளது. இதற்கு முன்னதாக தனிப்பட்ட காரணங்களுக்காக அவசரமாக நாடு திரும்ப வேண்டும் என கௌதம் கம்பீர் பிசிசிஐ-யிடம் முறையிட்டு இருக்கிறார்.
இதையும் படிங்க : இந்திய அணியில் இவர் ஒரு பூதம் மாதிரி.. எப்போவுமே மேஜிக் பண்றாரு – சஞ்சய் மஞ்சரேக்கர் பாராட்டு
அவரது வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட பிசிசிஐ-யும் கம்பீருக்கு இந்தியா வந்து செல்ல அனுமதி வழங்கியுள்ளது. இதன் காரணமாக அவசர அவசரமாக இந்தியா திரும்பியுள்ள கம்பீர் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக இந்திய அணியுடன் இணைவார் என்று கூறப்படுகிறது.



