ஆமாம். எனக்கு திமிர் தான் ஒத்துக்குறேன். நீங்க என்ன பண்ணீங்க ? – அப்ரிடிக்கு நேரடியாக பதிலளித்த கம்பீர்

Afridi
- Advertisement -

கிரிக்கெட் ரசிகர்களுக்கு இடையே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தும் ஒரு தொடராக எப்போதும் இந்தியா-பாகிஸ்தான் இடையேயான கிரிக்கெட் போட்டி நிலவும் என்றால் அது உண்மையே. அந்த அளவிற்கு இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியில் அனல்பறக்கும். ரசிகர்களிடையே பெரும் ஆதரவை பெற்ற இந்தத் தொடரில் இரு நாட்டு வீரர்களும் சிலசமயம் மைதானத்தில் வெற்றிக்காக கடுமையாக போராடுவார்கள்.

afridi

- Advertisement -

அவர்களுக்கிடையே வாக்குவாதம் மற்றும் மோதல் ஏற்படுவது உண்டு. இந்தவகையில் 2007-ஆம் ஆண்டு இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் நடைபெற்றது. அப்போது நடைபெற்ற போட்டியில் ஷாகித் அப்ரிடி மற்றும் கௌதம் கம்பீர் ஆகியோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.பிறகு இந்த மோதல் நடுவர்களால் தீர்த்து வைக்கப்பட்டது.

இப்போது கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற இருவரும் சமூக வலைதளம் மூலம் தங்களது மோதலை தொடர்ந்து வருகின்றனர் என்றே கூறலாம். அண்மையில் ஆப்ரிடி கேம் சேஞ்சர் என்ற தலைப்பில் தன்னுடைய கிரிக்கெட் அனுபவங்கள் குறித்த ஒரு புத்தகத்தை வெளியிட்டு இருந்தார். அந்த புத்தகத்தில் இந்திய அணி வீரர்களுடன் நடைபெற்ற சாதகமான நிகழ்வுகள் குறித்து விவரித்திருக்கும் அப்ரிடி இந்திய அணியின் முன்னாள் வீரரான கவுதம் கம்பீர் குறித்து கடுமையாக சாடியுள்ளார்.

Gambhir

கம்பீர் குண நலனில் கோளாறு இருப்பதாகவும், அவரது எண்ணங்கள் சரி இல்லை என்றும் அவருக்கு என்று ஒரு தனித்தன்மை கிடையாது என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார். அவரைப்போன்ற கிரிக்கெட் வீரர்கள் எப்போதாவதுதான் இருப்பார்கள். கிரிக்கெட்டில் அவர் பெரிய சாதனை செய்த வரலாறும் இல்லை. ஆனால் மனதில் டான் பிராட்மன், ஜேம்ஸ்பாண்ட் கலந்து செய்யப்பட்ட கலவையாக அவர் தன்னை தானே நினைத்துக் கொள்வார் என்று அப்ரிடி குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

இதுபோன்ற தன்னைப் பற்றிய கருத்தினை அறிந்த கம்பீர் தனது ட்விட்டர் பக்கத்தில் அவருக்கு பதிலடி தரும் விதமாக அவருக்கு குறிப்பிட்டதாவது : அவருடைய வயது என்னவென்று தெரியாது ? அப்புறம் எப்படி என்னுடைய சாதனைகளை தெரிந்து வைத்திருப்பார். சரி இருக்கட்டும் அவருக்கு ஒன்றை நினைவு கூற விரும்புகிறேன்.

தென்னாப்பிரிக்காவில் 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் நான் 54 பந்துகளில் 75 ரன்களை அடித்தேன். நீங்கள் அந்த போட்டியில் முதல் பந்திலேயே டக் அவுட் ஆகினீர்கள். மிக முக்கியமான கோப்பையை நாங்கள் கைப்பற்றினோம். ஆம் எனக்கு திமிர் தான் அது பொய் பேசுபவர்கள், ஆதிக்கம் செலுத்துபவர்கள் மற்றும் சந்தர்ப்பவாதிகள் இடம் மட்டுமே என்று கம்பீர் பதிலடி கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement