- Advertisement -
இந்திய கிரிக்கெட்

சஞ்சு சாம்சன் அடித்த 97 ரன்களுக்கு சமம் இவர் அடித்த 2 பவுண்டரி.. ஷிவம் துபேவை பாராட்டிய – கவுதம் கம்பீர்

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நேற்று கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற நடப்பு 2026 ஆம் ஆண்டிற்கான டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் கடைசி சூப்பர் 8 சுற்று போட்டியில் விளையாடிய இந்திய அணியானது மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 5 விக்கெட் வித்தியாசத்தில் அந்த அணியை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்தது. அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 195 ரன்களை குவித்தது.

ஷிவம் துபேவை பாராட்டிய பயிற்சியாளர் : கவுதம் கம்பீர்

பின்னர் 196 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது 19.2 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 199 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்திய அணி இந்த உலகக் கோப்பை தொடருக்கான அரையிறுதி வாய்ப்பையும் உறுதி செய்திருந்தது. இந்த போட்டியின் போது இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக :

- Advertisement -

சஞ்சு சாம்சன் 50 பந்துகளை சந்தித்து 12 பௌண்டரி மற்றும் 4 சிக்ஸர் என 97 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இந்திய அணி வெற்றிக்கு அழைத்துச் சென்றதோடு ஆட்டநாயகன் விருதினையும் வென்றிருந்தார். நேற்றைய போட்டியில் சஞ்சு சாம்சன் விளையாடிய விதம் பலரது மத்தியில் பாராட்டுகளை பெற்று வரும் வேளையில் இந்த ஆட்டம் குறித்து பல்வேறு கருத்துக்களையும் பலரும் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்திய அணியின் பயிற்சியாளரான கௌதம் கம்பீர் சஞ்சு சாம்சன் அடித்த 90 ரன்கள் எவ்வளவு முக்கியமோ அதற்கேற்றார் போன்று ஷிவம் துபே அடித்த இரண்டு பௌண்டரியும் சமமான ஒன்று என்று தனது கருத்தினை தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : ஒரு தனிப்பட்ட வீரரின் ரன்களை பேசுவதை தவிர்த்து ஒவ்வொரு வீரர்களையும் பற்றியும் பேசுவதில் மகிழ்ச்சி. சஞ்சு சாம்சன் சிறப்பாக விளையாடி அணியை வெற்றிக்கு அழைத்து சென்றார்.

- Advertisement -

இதையும் படிங்க : நிறைய வாய்ப்பு கிடைக்கல.. ஆனாலும் இன்னைக்கு நீ ஆடுன ஆட்டம் இருக்கே.. சஞ்சு சாம்சனை பாராட்டிய – யுவ்ராஜ் சிங்

அதேவேளையில் நாம் சிறிய இன்னிங்ஸ்களையும் பாராட்டியாக வேண்டும். அந்த வகையில் 19-வது ஓவரின் போது ஷிவம் துபே அடித்த இரண்டு பவுண்டரிகளும் இந்திய அணியை அழுத்தத்திலிருந்து வெளியேற்றியது என்றும் அவர் அடித்த இந்த இரண்டு பவுண்டரிகள் சஞ்சு சாம்சனுக்கு இணையாக ஒன்று என்றும் கௌதம் கம்பீர் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -