அடுத்த 10 வருஷத்துக்கு பாபர் அசாமை ஒன்னுமே பண்ண முடியாது. ஏன் தெரியுமா? – பாராட்டிய கவுதம் கம்பீர்

Gambhir-and-Babar
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று முடிந்த 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்ட பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி 4 வெற்றிகளை மட்டுமே பெற்று அரையிறுதிக்கு கூட முன்னேறாமல் புள்ளி பட்டியலில் ஐந்தாவது இடத்தினை பிடித்து வெளியேறியது.

இந்த உலகக் கோப்பை தொடர்க்கு முன்னதாக பல்வேறு முன்னாள் வீரர்களும் உலக கோப்பை தொடரில் சிறப்பாக செயல்படும் வீரர்கள் குறித்த தங்களது கருத்தினை வெளியிட்டபோது அந்த சமயத்தில் இந்திய அணியின் முன்னாள் வீரரான கௌதம் கம்பீர் பாபர் அசாம் உலக கோப்பை தொடரின் போது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று அறிவித்திருந்தார்.

- Advertisement -

ஆனால் நடைபெற்று முடிந்த 50 ஓவர் உலக கோப்பையின் லீக் சுற்றுகளின் முடிவில் 320 ரன்கள் மட்டுமே குவித்தார். அதோடு இந்த உலகக் கோப்பை தொடரில் ஒரு சதத்தை கூட அவர் பதிவு செய்யவில்லை.

இந்நிலையில் உலக கோப்பை தொடர் முடிந்த கையோடு தற்போது கேப்டன் பதவியையும் இழந்துள்ள பாபர் அசாம் இனிவரும் காலங்களில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று மீண்டும் கெளதம் கம்பீர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் :

- Advertisement -

இதுவரை நீங்கள் பார்த்த பாபர் அசாமை விட இனிமேல் நீங்கள் பார்க்கப்போகும் பாபர் அசாம் மிகச்சிறப்பான ஒரு வீரராக இருப்பார். ஏனெனில் உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக அவர் வேறு மாதிரியான வீரராக இருந்தார். இந்த உலகக் கோப்பை தொடரில் மிகச்சிறப்பான பேட்ஸ்மேனாக இருப்பார் என்று நான் அவரை குறிப்பிட்டேன். ஆனால் கேப்டன்சி அழுத்தம் காரணமாக அவரால் பெரிதாக சாதிக்க முடியாமல் போனது.

இதையும் படிங்க : விஜய் ஹசாரே 2023 காலிறுதி : வலுவான மும்பையை வீட்டுக்கு அனுப்பிய தமிழ்நாடு.. செமி ஃபைனலில் மோதப்போவது யார்?

கேப்டன்சி அழுத்தம் அவரது ஆட்டத்தை பாதித்து விட்டது. ஆனால் தற்போது 29 வயதாகும் பாபர் அசாம் அடுத்த 10 ஆண்டுகளுக்கு கேப்டனாக இல்லாமல் ஒரு மிகச் சிறப்பான பேட்ஸ்மேனாக திகழ்வார். இப்போதிலிருந்து அவர் ஓய்வு பெறும் வரை எப்படிப்பட்ட ஒரு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தப்போகிறார் என்பதை அடுத்த 10 ஆண்டுகளுக்கு அனைவரும் பார்க்கப்போகிறீர்கள் என கௌதம் கம்பீர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement