சாம்பியன்ஸ் கோப்பை பெருசில்ல.. அடுத்த 3 கோப்பையை குறிவைத்து கம்பீர் போட்டுள்ள நிபந்தனை – பி.சி.சி.ஐ ஒப்புதல்

Gambhir
- Advertisement -

கடந்த ஆண்டு டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் முடிந்த கையோடு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு வந்த ராகுல் டிராவிட் அந்த பதிவியிலிருந்து வெளியேறினார். பின்னர் இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பிசிசிஐ -யின் சார்பில் புதிய பயிற்சியாளராக கௌதம் கம்பீர் கொண்டுவரப்பட்டார். அப்படி கௌதம் கம்பீர் பயிற்சியாளராக இந்திய அணிக்குள் வந்ததிலிருந்தே பெரிய அளவு மாற்றங்களை அணிக்குள் கொண்டு வந்துள்ளார்.

பி.சி.சி.ஐ-யிடம் புதிய கோரிக்கையை முன்வைத்த கவுதம் கம்பீர் :

அதிலும் குறிப்பாக டி20 போட்டிகளுக்கென தனி அணியை அமைத்துள்ள அவர் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் சில வீரர்களையும் புதிதாக அறிமுகப்படுத்தியுள்ளார். டி20 போட்டிகளில் அவரது தலைமையில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டாலும் டெஸ்ட் தொடர்களில் தொடர்ச்சியாக தோல்வியை பெற்று வந்தது அவர் மீது சற்று விமர்சனத்தை ஏற்படுத்தியது.

- Advertisement -

ஆனால் அண்மையில் நடைபெற்று முடிந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி கைப்பற்றியதால் தற்போது பயிற்சியாளராக முதல் ஐசிசி கோப்பையை பெற்றிருக்கிறார். இதன் காரணமாக இன்னும் சில ஆண்டுகள் நிச்சயம் கௌதம் கம்பீர் தான் இந்திய அணியை பயிற்சியாளராக வழிநடத்துவார் என்று உறுதியாகியுள்ளது.

இந்நிலையில் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் வெற்றியை கௌதம் கம்பீர் பெரியதாக பார்க்கவில்லை என்றும் அடுத்த 2027-ஆம் ஆண்டிற்குள் நடைபெறவுள்ள 2026 டி20 உலக கோப்பை, 2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் 2027 ஒருநாள் உலகக் கோப்பை ஆகிய மூன்று ஐசிசி கோப்பைகளையும் குறிவைத்து தற்போது கம்பீர் அடுத்த கட்ட முயற்சிகளில் இறங்கியுள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில் அணித்தேர்வில் மூன்று வித அணிகளுக்கும் தனித்தனியாக ஸ்பெஷலிஸ்ட் வீரர்களை கொண்டுவர கௌதம் கம்பீர் திட்டமிட்டுவதாக கூறப்படுகிறது.

- Advertisement -

ஏற்கனவே சூரியகுமாரி தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி தான் டி20 போட்டிகளில் விளையாடி வருவதால் அவர்களே அடுத்த டி20 உலக கோப்பை தொடரில் விளையாடுவார்கள் என்று தெரிகிறது. அதேவேளையில் இனி ஒருநாள் அணிக்கான தனி ஸ்பெஷலிஸ்ட் வீரர்களையும், டெஸ்ட் அணிக்கு ஏற்ப விளையாடும் வீரர்களை வைத்து டெஸ்ட் அணியையும் கொண்டுவர பிசிசிஐ-யிடம் கௌதம் கம்பீர் நிபந்தனை வைத்ததாகவும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க : தல தோனியை பாக்கனும்.. அஷ்வினுடன் டைம் ஸ்பென்ட் பண்ணனும் – சி.எஸ்.கே உடன் இணைந்ததும் ஜடேஜா ஹேப்பி

அவரது அந்த நிபந்தனையை பிசிசிஐ ஏற்று கொண்டதால் இந்திய அணியில் பெரும் மாற்றங்கள் இனிவரும் காலங்களில் நிகழும் என்று கூறப்படுகிறது. இந்திய அணி அடுத்த இரண்டு ஆண்டுகளில் மூன்று ஐசிசி கோப்பையை கைப்பற்ற வேண்டும் என்று கம்பீர இந்த முன்னெடுப்பை கையில் எடுத்துள்ளதால் பிசிசிஐ-யும் அவருக்கு தேவையான ஆதரவை வழங்கி வழங்க சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement