சீனியர் வீரர்களாக இருந்தா என்ன? நான் சொன்னா பண்ணனும்.. ரோஹித் கோலிக்கு – உத்தரவிட்ட கம்பீர்

Kohli-and-Rohit
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் டி20 கிரிக்கெட் தொடரானது நாளை நடைபெற உள்ள மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியுடன் முடிவுக்கு வர இருக்கிறது. அதற்கு அடுத்து இந்திய அணி இலங்கை அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது.

இந்நிலையில் இந்த தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்துள்ள ரோகித் சர்மா, விராட் கோலி, குல்தீப் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல் ராகுல் மற்றும் ஹர்ஷித் ராணா போன்ற வீரர்கள் இலங்கை சென்றடைந்துள்ளனர்.

- Advertisement -

மேலும் அவர்கள் அனைவரும் அபிஷேக் நாயர் தலைமையில் பயிற்சியில் ஈடுபட இருக்கிறார்கள் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. வழக்கமாக இலங்கை போன்ற சிறிய அணிகளுக்கு எதிராக இந்திய அணி பங்கேற்கும் போது ரோகித் சர்மா விராட் கோலி போன்ற வீரர்கள் பயிற்சியை தவிர்த்துவிட்டு தொடருக்கு ஒரு சில தினங்களுக்கு முன்னதாக வலைப்பயிற்சியில் ஈடுபடுவார்கள்.

ஆனால் தற்போது இலங்கை சென்றுள்ள ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோரை இன்றில் இருந்தே வலைப்பயிற்சி மேற்கொள்ளுமாறு பி.சி.சி.ஐ உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த உத்தரவிற்கு பின்னால் கவுதம் கம்பீர் தான் இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

- Advertisement -

அணியில் எவ்வளவு பெரிய வீரர்களாக இருந்தாலும் சரி தொடர்ச்சியாக வலைப்பயிற்சியினை தவிர்க்காமல் ஈடுபட வேண்டும் என்று அவர் கூறியதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இலங்கை அணிக்கெதிரான தொடரில் ஓய்வு கேட்டிருந்த அவர்கள் இருவரையும் கம்பீர் தான் தேர்வு செய்தார். தற்போது அவர்களை வலைப்பயிற்சியில் ஈடுபடும் படியும் உத்தரவு கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : முன்கூட்டியே இலங்கை சென்றடைந்த கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி – மேலும் 2 வீரர்களும் பயணம்

இந்திய அணியில் பேட்ஸ்மேன்கள் தொடர்ந்து சிறப்பாக விளையாடும் பட்சத்தில் அவர்கள் அனைத்து தொடர்களிலும் விளையாட வேண்டும் என்றும் பந்துவீச்சாளர்களுக்கு மட்டும் தான் பணிச்சுமை அடிப்படையில் ஓய்வு வழங்கப்படும் என்றும் கம்பீர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement