முன்னேற வேண்டியது கம்பீர் இல்ல.. பெரிய வேலையில் என்னோட கோச்சிங் இப்படித் தான் இருக்கும்.. கம்பீர் அதிரடி

Gautam Gambhir 33
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக கௌதம் கம்பீர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். புதிய பயிற்சியாளராக வந்ததும் ஹர்திக் பாண்டியாவை கேப்டன்ஷிப் பொறுப்பிலிருந்து மொத்தமாக கழற்றிவிட்டுள்ள அவர் சூரியகுமார் யாதவை புதிய டி20 கேப்டனாக அறிவித்துள்ளார். அத்துடன் சுப்மன் கில்லை துணை கேப்டனாக தேர்ந்தெடுத்துள்ள அவர் அபிஷேக் ஷர்மா, சஞ்சு சாம்சன், ருதுராஜ் கெய்க்வாட் போன்ற வீரர்களை கழற்றி விட்டது ரசிகர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் வெற்றிகரமான இந்திய அணியை வழி நடத்துவது மிகவும் கடினமான வேலை என கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார். அதே சமயம் இந்திய அணியில் தாம் புதிதாக எந்த சிக்கலையும் ஏற்படுத்த மாட்டேன் என்று கம்பீர் உறுதியளித்துள்ளார். அத்துடன் இந்திய அணி தான் முன்னேற வேண்டும் தவிர கௌதம் கம்பீர் முன்னேற வேண்டியதில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

- Advertisement -

புதிய கோச்:
ராகுல் டிராவிட்டுக்கு பின் பயிற்சியாளராக தம்முடைய அணுகுமுறை எப்படி இருக்கும் என்பது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “வீரர்களுக்கு சுதந்திரம் கொடுப்பது முக்கியம் என்று நினைக்கிறேன். பயிற்சியாளருக்கும் வீரர்களுக்கும் உறவு இருக்க வேண்டும் என்று நான் நம்பவில்லை. என்னைப் பொறுத்த வரை சிறந்த உறவு நம்பிக்கையின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளது”

“அது முக்கியமானதாக இருக்கும். எனது தலைமையில் வீரர்கள் ஆதரவு பெறுவார்கள் என்பதை அவர்களுக்கு நான் உறுதியளிக்கிறேன். மகிழ்ச்சியாக இருக்கக்கூடிய அணியே பாதுகாப்பான அணியாக இருக்கும் என்று நான் எப்போதும் சொல்வேன். எனவே மொத்த அணியையும் பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியாகவும் வைத்திருப்பது என்னுடைய பொறுப்பு. நான் பல விஷயங்களை சிக்கலாக்க மாட்டேன். அல்லது சிக்கலாக்க விரும்ப மாட்டேன்”

- Advertisement -

“டி20 கிரிக்கெட்டின் சாம்பியன், டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் 50 ஓவர் உலகக் கோப்பை ஃபைனலுக்கு தகுதி பெற்ற வெற்றிகரமான அணியை நான் எடுத்துக் கொள்கிறேன். எனவே அதை வெற்றிகரமாக தொடர வைப்பது மிகப்பெரிய வேலை. இலங்கைத் தொடர் முடிந்ததும் எங்களுக்கு ஒரு மாதம் இடைவெளி இருக்கிறது. பின்னர் 10 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளோம். குறிப்பாக மிகப்பெரிய ஆஸ்திரேலிய தொடர் வரவுள்ளது”

இதையும் படிங்க: ஒழுங்கா மன்னிப்பு கேளுங்க.. பிரையன் லாராவை விளாசிய ஜாம்பவான் ரிச்சர்ட்ஸ், கார்ல் கூப்பர் – காரணம் என்ன?

“அதுவே சவால் என்று நினைக்கிறேன். அந்த டெஸ்ட் போட்டிகளை நாங்கள் வெல்வோம் என்று நம்புகிறோம். அந்தப் போட்டிகளாலேயே ஜடேஜா போன்றவர்கள் இலங்கைத் தொடரில் விளையாடவில்லை. ஏனெனில் அவர்கள் டெஸ்ட் அணியில் முக்கிய வீரர்களாக உள்ளனர். இந்திய அணியின் முன்னேற்றம் மிக முக்கியமானதே தவிர கம்பீர் முக்கியமில்லை. எனவே நாம் அனைவரும் இதயத்திலிருந்து ஒன்றாக சேர்ந்து ஒரே பக்கத்தில் நின்றால் இந்தியா கிரிக்கெட்டில் முன்னோக்கி செல்லும்” என்று கூறினார்.

Advertisement