தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. அதனால் 15 வருடங்கள் கழித்து தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக சொந்த மண்ணில் ஒரு டெஸ்ட் போட்டியில் இந்தியா தோற்றுள்ளது. அத்துடன் சொந்த மண்ணில் குறைந்தபட்ச இலக்கை (124) சேசிங் செய்ய முடியாமல் இந்தியா தோல்வியை சந்தித்துள்ளது.
முன்னதாக நியூஸிலாந்துக்கு எதிராக கடந்த வருடம் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் இந்தியா 3 – 0 (3) என்ற கணக்கில் தோற்றது. அந்த தோல்விக்கு சுழலுக்கு சாதகமான பிட்ச்கள் அமைக்கப்பட்டிருந்ததே முக்கிய காரணமாக அமைந்தது. அந்த சூழ்நிலையில் இப்போட்டியில் கொல்கத்தா பிட்ச் முதல் நாளிலிருந்தே பேட்டிங் செய்வதற்கு சவாலாக இருந்தது இந்தியா 3 நாட்களுக்குள் தோற்க முக்கிய காரணமானது.
கேட்டு வாங்கிய பிட்ச்சில்:
அதனால் நியூசிலாந்து தொடரில் சந்தித்த தோல்வியிலிருந்து இந்திய அணி எந்த பாடத்தையும் கற்கவில்லையா? என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் டாஸ் சாதகத்தை அகற்றி இந்திய வீரர்களின் மன பலத்தை சோதிப்பதற்காகவே இப்படிப்பட்ட பிட்ச் வேண்டும் என்று கொல்கத்தா க்யூரேட்டரிடம் கேட்டு வாங்கியதாக பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார். ஆனால் உண்மையில் பிட்ச் சுழலுக்கு மட்டும் சாதகமாக இல்லை என்று அவர் கூறியுள்ளார்.
இல்லையென்றால் ஸ்பின்னர்களை விட வேகப்பந்து வீச்சாளர்கள் எப்படி அதிக விக்கெட்டுகள் எடுத்திருக்க முடியும்? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். எனவே இந்திய அணி நன்றாக விளையாடாதே தோல்விக்கு காரணம் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “அது ஒன்றும் முற்றிலும் விளையாட முடியாத பிட்ச் கிடையாது. அது உங்களுடைய மனப்பலத்தை மதிப்பிடுவதாக இருந்தது என்று நினைக்கிறேன்”
தோற்ற இந்தியா:
“அங்கே யாரெல்லாம் நல்ல தடுப்பாட்டத்தைக் கொண்டிருந்தவர்கள் ஸ்கோர் அடித்துள்ளனர். பிட்ச்சில் பேய் எதுவுமில்லை. ஏனெனில் அதில் அக்சர் பட்டேல், பவுமா, வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் ரன்கள் அடித்தார்கள். ஒருவேளை பிட்ச் சுழலுக்கு சாதகமாக இருக்கிறது என்று நீங்கள் சொன்னால், உண்மையில் அங்கே வேகப்பந்து வீச்சாளர்கள் தான் நிறைய விக்கெட்டுகளை எடுத்துள்ளார்கள்”
இதையும் படிங்க: இந்த பிட்ச்சை நாங்க தான் கேட்டு வாங்குனேன்.. ஆனா இந்தியாவின் தோல்விக்கு காரணமே வேற.. கம்பீர் விளக்கம்
“எனவே பிட்ச் கடினமாக இருந்ததாக எனக்குத் தெரியவில்லை. அது உங்களுடைய டெக்னிக், மனபலம், சுபாவம் ஆகியவற்றுக்கு சவாலைக் கொடுத்தது. அங்கே நீங்கள் நீண்ட நேரம் பேட்டிங் செய்ய முயற்சித்தால் ரன்கள் அடிக்கலாம். ஆனால் அட்டாக் செய்யும் முயற்ச்சித்தால் ஸ்கோர் செய்வது கடினம். பந்தை நன்றாக தடுத்த ராகுல், சுந்தர், பவுமா ஆகியோர் ஸ்கோர் அடித்தனர். எனவே இந்த பிட்ச்சில் ரன்கள் அடிக்கவே முடியாது என்று அர்த்தமல்ல. இது போன்ற பிட்ச்சில் இதற்கு முன்பும் நாங்கள் விளையாடியுள்ளோம்” என்று கூறினார்.



