ரோஹித், கோலியை நாங்க ரிட்டையராக வைக்கல.. இது அவங்களுக்கான வாய்ப்பு.. கோச் கம்பீர் விளக்கம்

Gautam Gambhir
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரங்கள் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் அடுத்தடுத்து டெஸ்ட் போட்டிகளில் ஓய்வு பெற்றனர். கடந்த நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா தொடர்களில் அவர்கள் சுமாராக விளையாடியது இந்தியாவின் தோல்விக்கு காரணமானது. அதனால் அடுத்து நடைபெறும் இங்கிலாந்து தொடரில் அவர்களை கழற்றி விட தேர்வுக்குழு தலைவர் அகர்கர், பயிற்சியாளர் கம்பீர் மற்றும் பிசிசிஐ சேர்ந்து முடிவெடுத்ததாக செய்திகள் வெளி வந்தன.

அதற்கு முன்பாக ரோஹித் சர்மா இன்ஸ்டாகிராமில் ஓய்வு முடிவை அறிவித்தார். அடுத்த சில நாட்களில் விராட் கோலியும் ஓய்வு பெறுவதாக அறிவித்தது ஏராளமான இந்திய ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. அந்த ஓய்வு அறிவிப்பால் அடுத்து நடைபெறும் இங்கிலாந்து தொடரில் இளம் வீரர்களுடன் விளையாடப் போகும் இந்தியா வெற்றி பெறுமா என்பது சந்தேகமாக காணப்படுகிறது.

- Advertisement -

எங்களுக்கு சம்மந்தமில்லை:

இந்நிலையில் விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோரை தேர்வுக்குழு மற்றும் பயிற்சியாளர் குழுவினர் ஓய்வு பெறுமாறு வற்புறுத்தவில்லை என்று கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார். மேலும் அவர்களுடைய ஓய்வு இங்கிலாந்து மண்ணில் இளம் வீரர்கள் சிறப்பாக விளையாடி நாட்டுக்காக வெற்றியை பெற்றுக் கொடுப்பதற்கான வாய்ப்பு என்றும் அவர் கூறியுள்ளார். இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரான அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு.

“ஆம் நாங்கள் 2 சீனியர்கள் இல்லாமல் இங்கிலாந்துக்கு செல்ல உள்ளோம். சில நேரங்களில் இது இளம் வீரர்கள் தங்களுடைய கையை உயர்த்தி விளையாடுவதற்கான வாய்ப்பு என்று நான் நம்புகிறேன். ஆம் இந்த வாய்ப்பு கடினமாக இருக்கும். ஆனால் அவர்களுடைய இடத்தை நிரப்புவதற்காக கையை உயர்த்தக்கூடிய இளம் வீரர்கள் அங்கே இருப்பார்கள். இந்த கேள்வி ஏற்கனவே என்னிடம் கேட்கப்பட்டுள்ளது”

- Advertisement -

கம்பீர் விளக்கம்:

“கடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஜஸ்ப்ரித் பும்ரா இல்லாமல் விளையாடினோம். அப்போதும் நான் இதையே தான் சொன்னேன். அதாவது ஒருவர் இல்லையெனில் அது மற்றொருவர் ஸ்பெஷலாக நாட்டுக்கு ஏதாவது செய்வதற்கான வாய்ப்பாகும். அந்த வகையில் மற்ற வீரர்கள் இந்த வாய்ப்புக்காக காத்திருக்கிறார்கள் என்று நம்புகிறேன். விளையாட்டில் விளையாடத் துவங்கும் போது எப்போது முடிக்க வேண்டும் என்பது தனிநபர் எடுக்க வேண்டிய முடிவு என்று நினைக்கிறேன்”

இதையும் படிங்க: 2011 சச்சின் மாதிரி.. பிரபஞ்சமே வேலை செய்யுது.. விராட் கோலி தவிர யாருக்கும் அந்த தகுதியில்ல.. திவாரி பேட்டி

“யார் எப்போது ஓய்வு பெற வேண்டும் என்பதைச் சொல்ல மற்றவர்களுக்கு எந்த உரிமையும் கிடையாது. பயிற்சியாளர், தேர்வாளர் அல்லது நாட்டில் இருக்கும் யாராக இருந்தாலும் ஒருவர் எப்போது ஓய்வு பெற்ற வேண்டும், ஓய்வு பெறக்கூடாது என்பதை சொல்வதற்கான உரிமையை பெற்றிருக்கவில்லை. ஓய்வு என்பது அவர்களிடமிருந்து தாமாக வருவதாகும்” என்று கூறினார்.

Advertisement