இதை செய்யலன்னா 2027 உலகக் கோப்பையில் ரோஹித், கோலிக்கு வாய்ப்பு கஷ்டம் தான்.. கம்பீர் மறைமுகம்

Gautam Gambhir 2
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நாயகர்கள் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் அடுத்தடுத்து டெஸ்ட் போட்டிகளில் ஓய்வு பெற்றனர். ஏற்கனவே 2024 டி20 உலகக் கோப்பை வெற்றியுடன் அவர்கள் சர்வதேச 20 ஓவர் போட்டிகளில் ஒன்றாக விடை பெற்றனர். கடந்த நியூசிலாந்து, ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர்களில் சுமாராக விளையாடிய அவர்கள் இந்தியாவின் தோல்விக்கு காரணமாக அமைந்தனர்.

அதனால் 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு முதல் முறையாக தகுதி பெறாமல் இந்தியா வெளியேறியது. அதன் காரணமாக அடுத்த இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் அவரை கழற்றி விட பிசிசிஐ முடிவெடுத்ததாக தெரிகிறது. அதற்கு முன்பாக ரோஹித் சர்மா முதலில் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அதைத் தொடர்ந்து சில நாட்களில் விராட் கோலி ஓய்வு பெற்றார்.

- Advertisement -

2027 உலகக் கோப்பை உறுதியல்ல:

இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான்களாக கருதப்படும் அவர்கள் அப்படி அடுத்தடுத்து ஓய்வு பெற்றது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. இதைத் தொடர்ந்து 2027 உலகக்கோப்பையில் இந்தியாவுக்காக கடைசியாக அவர்கள் ஒன்றாக விளையாடுவார்கள் என்று ரசிகர்கள் நம்புகின்றனர். ஏனெனில் 2025 சாம்பியன்ஸ் ட்ராபியை இந்தியா 12 வருடங்கள் கழித்து வென்று சாதனைப் படைத்தது.

அந்த வெற்றிக்கு விராட் கோலி அரையிறுதியில் ஆட்டநாயகன் விருது வென்று முக்கிய பங்காற்றினார். கேப்டன் ரோஹித் சர்மா இறுதிப் போட்டியில் ஆட்டநாயகன் விருது வென்று இந்தியாவின் வெற்றியில் கருப்பு குதிரையாக செயல்பட்டார். இந்நிலையில் 2027 உலகக் கோப்பைக்கு இன்னும் இரண்டரை வருடங்கள் இருப்பதாக பயிற்சியாளர் கௌதம் கம்பீர் கூறியுள்ளார்.

- Advertisement -

கம்பீர் மறைமுகம்:

எனவே அதற்குள் நிலைமைகள் மாறலாம் என்று அவர் தெரிவித்துள்ளார். இரண்டரை வருடம் கழித்து தொடர்ச்சியாக பெரிய ரன்கள் குவித்து நல்ல ஃபார்மில் இருந்தால் மட்டுமே விராட் கோலி, ரோஹித் சர்மாவுக்கு உலகக் கோப்பையில் வாய்ப்பு கொடுக்கப்படும் என்று அவர் மறைமுகமாக தெரிவித்துள்ளார். இது பற்றி செய்தியாளரின் கேள்விக்கு கம்பீர் கொடுத்த பதில் பின்வருமாறு.

இதையும் படிங்க: ரோஹித், கோலியை நாங்க ரிட்டையராக வைக்கல.. இது அவங்களுக்கான வாய்ப்பு.. கோச் கம்பீர் விளக்கம்

“அதற்கு முன்பாக நமக்கு டி20 உலகக் கோப்பை (2026) இருக்கிறது. அது மிகப்பெரிய தொடர். அது இந்தியாவில் பிப்ரவரி – மார்ச் மாதத்தில் நடைபெற உள்ளது. எனவே இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு பின் எங்களுடைய மொத்த கவனமும் டி20 உலகக் கோப்பையில் தான் இருக்கும். அதற்கடுத்த வருடம் 2027 உலகக்கோப்பை நடைபெறுகிறது. அந்தத் தொடருக்கு இன்னும் இரண்டரை வருடம் இருக்கிறது. எது எப்படி இருந்தாலும் நான் ஒரு விஷயத்தை மட்டுமே சொல்வேன். நீங்கள் தொடர்ச்சியாக அசத்தினால் வயது என்பது வெறும் நம்பர் மட்டுமே” என்று கூறினார்

Advertisement