- Advertisement -
இந்திய கிரிக்கெட்

அந்த 3 பசங்களை பாருங்க.. மாற்றம் ஆரம்பம்.. இதை செய்யலன்னா டீம்ல இடமில்லை.. எச்சரித்த கம்பீர்

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் இந்தியா ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. அந்தத் தொடரில் இதுவரை நடைபெற்ற 4 போட்டிகளில் 2 தோல்விகளை சந்தித்துள்ள இந்தியா 10 வருடங்களுக்கு பின் பார்டர் – கவாஸ்கர் கோப்பையை வெல்ல முடியாமல் நழுவ விட்டுள்ளது. மேலும் 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை ஃபைனல் வாய்ப்பையும் இந்தியா கிட்டத்தட்ட இழந்துள்ளது.

இந்த தோல்விக்கு விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகிய சீனியர்களின் சுமாரான ஆட்டம் முக்கிய காரணமாக அமைந்துள்ளது. அதன் காரணமாக அவர்கள் ஓய்வு பெற வேண்டும் என்று இந்திய ரசிகர்களே விமர்சித்து வருகிறார்கள். இந்நிலையில் இந்திய அணியில் மூத்த வீரர்களை கழற்றி விட்டு வருங்காலத்தை கட்டமைக்கும் வேலைகள் ஏற்கனவே துவங்கி விட்டதாக கௌதம் கம்பீர் கூறியுள்ளார்.

- Advertisement -

கம்பீர் எச்சரிக்கை:

எனவே நன்றாக செயல்படும் வீரர்களுக்கு மட்டுமே அணியில் இடம் கிடைக்கும் என்று அவர் விராட் கோலி ரோஹித் சர்மா ஆகியோரை மறைமுகமாக எச்சரித்துள்ளார். இது பற்றி கம்பீர் பேசியது பின்வருமாறு. “எந்த வகையான மாற்றத்திலும் உண்மை தான் முக்கியமான விஷயமாகும். மாற்றம் என்பது சீனியர்களை கழற்றி விட்டு இளம் வீரர்களை சேர்ப்பதைப் பற்றியது மட்டுமல்ல”

“அதே சமயம் நல்ல செயல்பாடுகள் மட்டுமே உங்களைத் தொடர்ந்து இந்திய அணியில் வைத்திருக்கும். பயிற்சியாளர்கள் மற்றும் ரசிகர்களாக விமர்சிப்பது மட்டும் நம்முடைய வேலையல்ல. வெற்றிகள் கிடைக்காத போது நம் வீரர்களுக்கு ஆதரவு கொடுக்க வேண்டியதும் முக்கிய வேலையாகும். மாற்றம் என்பது எங்களுக்காக மட்டும் நடைபெறாது. மொத்த நாட்டுக்காக நடைபெறும்”

- Advertisement -

இளம் வீரர்கள் ரெடி:

“ஆம் இது இந்திய கிரிக்கெட்டில் சுவாரசியமான நேரமாகும். கடந்த காலங்களில் மொத்த அணியையும் சுமந்து கொண்டிருந்த ஏதேனும் ஒரு துறையில் மட்டுமே மாற்றங்கள் நிகழ்தன. ஆனால் இப்போது 2 துறைகளிலுமே மாற்றங்கள் நிகழ்வதை உங்களால் பார்க்க முடிகிறது. தங்களது முதல் ஆஸ்திரேலிய தொடரிலேயே சில இளம் பேட்ஸ்மேன்கள் மற்றும் பவுலர்கள் வந்து அசத்துவதை நீங்கள் பார்க்கிறீர்கள்”

இதையும் படிங்க: இந்திய அணிக்குள் அதுக்காக சண்டை உண்மை தான்.. அதை செய்யாதவங்களுக்கு இடமில்லை.. கம்பீர் வெளிப்படை

“ஜெய்ஸ்வால், நித்திஷ் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர் போன்ற இளம் வீரர்களை பாருங்கள். ஆகாஷ் தீப் தன்னுடைய முதல் பயணத்திலேயே அசத்தியுள்ளார். அந்த வகையில் இந்த தொடரை நம்மால் எப்படி ஒன்றாக விளையாடி வெல்ல முடியும் என்பதே எங்களுடைய அணிக்குள் விவாதங்களாக இருந்தது” எனக் கூறினார். முன்னதாக இந்த தொடரின் பாதியிலேயே அஸ்வின் விடை பெற்ற நிலையில் கடைசி போட்டியின் முடிவில் ரோஹித் ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -