இந்திய அணிக்குள் அதுக்காக சண்டை உண்மை தான்.. அதை செய்யாதவங்களுக்கு இடமில்லை.. கம்பீர் வெளிப்படை

Gautam Gambhir 2
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் முதல் 4 போட்டிகளின் முடிவில் இந்தியா 2 தோல்விகளை சந்தித்துள்ளது. அதனால் 10 வருடங்கள் கழித்து பார்டர் – கவாஸ்கர் கோப்பையை வெல்ல முடியாமல் இந்தியா நழுவ விட்டுள்ளது. மேலும் 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை ஃபைனலுக்கு தகுதி பெறும் வாய்ப்பையும் இந்தியா கிட்டத்தட்ட இழந்துள்ளது.

அந்தத் தோல்விக்கு விராட் கோலி, கேப்டன் ரோகித் சர்மா உள்ளிட்ட மூத்த வீரர்களின் சுமாரான ஆட்டம் முக்கிய காரணமாக அமைந்தது. அதனால் கோபமடைந்த பயிற்சியாளர் கௌதம் கம்பீர் உங்களுக்கு ஆட்டத்தை போதுமான அளவுக்கு பார்த்து நொந்து விட்டதாக இந்திய வீரர்களிடம் கூறியதாக செய்திகள் வெளியானது. அதே போல “அதிரடியாக விளையாடுகிறோம் என்ற வார்த்தைகள் சாக்காக சொல்லாதீர்கள்” என்றும் கம்பீர் சொன்னதாக செய்திகள் தெரிவித்தன.

- Advertisement -

வெற்றிக்காக சண்டை:

அந்த வகையில் இந்திய அணிக்குள் பயிற்சியளர் கம்பீர் மற்றும் வீரர்களுக்கு இடையே சண்டை ஏற்பட்டதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் இணையத்தில் செய்தி வெளியானது. தற்போது வெற்றி கிடைக்காததற்காக அப்படி பேசியது உண்மை தான் என்று கம்பீர் மறைமுகமாக ஒப்புக் கொண்டுள்ளார். மேலும் சிறப்பாக செயல்படும் வீரர்களுக்கு மட்டுமே அணியில் தொடர்ந்து இடம் கிடைக்கும் என்றும் அவர் வெளிப்படையாக கூறியுள்ளார்.

இது பற்றி கம்பீர் பேசியது பின்வருமாறு. “பயிற்சியாளர் மற்றும் வீரர்களுக்கு இடையேயான விவாதங்கள் அணிக்கு உள்ளேயே இருக்க வேண்டும். அது பற்றி வெளியான செய்திகள் உண்மையல்ல. ஒரு அணியாக நீங்கள் முன்னேற விரும்புகிறீர்கள். எனவே அணிக்குள் சில உண்மையான விவாதங்கள் நடைபெறுவது முக்கியம்”

- Advertisement -

கம்பீர் வெளிப்படை:

“ஒவ்வொரு தனிநபர் வீரர்களுக்கும் என்ன செய்ய வேண்டும் என்பது தெரியும். எந்த பகுதியில் வேலை செய்ய வேண்டும் என்பதும் தெரியும். எனவே அவர்களைப் பற்றி நான் பேச மாட்டேன். நாங்கள் அணியாக வெல்கிறோம் அணியாக தோற்கிறோம். நாட்டுக்காக விளையாடும் போது நீங்கள் உங்களுடைய சிறந்த அதிகபட்ச பங்களிப்பை கொடுக்க வேண்டும். அது நிகழாத போது நடைபெறும் விவாதங்கள் பயிற்சியாளர் மற்றும் வீரர்களுக்கு இடையே மட்டும் இருக்க வேண்டும்”

இதையும் படிங்க: 101 ரன்ஸ்.. பெரேரா 2 அதிரடி சாதனை.. நியூஸிலாந்து மண்ணில் 18 வருடம் கழித்து இலங்கை வெற்றி

“துரதிஷ்டவசமாக நாம் வெற்றிகளை மட்டுமே பார்க்கிறோம். எனவே எங்களுடைய அணிக்குள் இருக்கும் விவாதங்கள் அணிக்கு உள்ளேயே இருக்க வேண்டும். அணியில் நேர்மையான மக்கள் இருக்கும் வரை இந்திய அணி பாதுகாப்பான கைகளில் இருக்கும். நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்துவது மட்டுமே உங்களை இந்திய அணியில் தொடர்ந்து நீடித்து வைத்திருக்கும்” என்று கூறினார்.

Advertisement