இதுல என்ன தப்பு? இதை மூடி மறைக்கல வலிக்கட்டும்.. இந்தியாவின் 12 வருட அவமான தோல்வி பற்றி கம்பீர் பேட்டி

Gautam gambhir 2
- Advertisement -

நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிராக இந்தியா தங்களுடைய சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. அதில் இதுவரை நடைபெற்ற 2 போட்டிகளிலும் இந்தியா அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்துள்ளது. அதன் காரணமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் 12 வருடங்கள் கழித்து தங்களுடைய சொந்த மண்ணில் முதல் முறையாக இந்தியா ஒரு தொடரில் தோல்வியை பதிவு செய்துள்ளது.

மேலும் நியூசிலாந்துக்கு எதிராக முதல் முறையாக இந்தியா தங்களின் சொந்த மண்ணில் ஒரு தொடரில் அவமானத் தோல்வியை பதிவு செய்துள்ளது. இந்த தோல்விக்கு இந்திய பேட்ஸ்மேன்கள் நன்றாக விளையாடாதது முக்கிய காரணமாக அமைந்தது. குறிப்பாக முதல் போட்டியில் 46க்கும் 2வது போட்டியில் 156க்கும் ஆல் அவுட்டாகும் அளவுக்கு இந்திய பேட்ஸ்மேன்கள் மோசமாக விளையாடினார்கள்.

- Advertisement -

என்ன தவறு:

அதன் காரணமாக பவுலர்களால் போராடியும் இந்தியாவின் தோல்வியை தவிர்க்க முடியவில்லை. இந்நிலையில் இந்த தோல்விக்கு பேட்ஸ்மேன்கள் மட்டும் காரணம் என்று சொல்ல விரும்பவில்லை என பயிற்சியாளர் கௌதம் கம்பீர் கூறியுள்ளார். அத்துடன் 12 வருடங்கள் கழித்து சொந்த மண்ணில் தோற்பதில் என்ன தவறு என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஏனெனில் இது போன்ற தோல்விகள் தான் இளம் வீரர்களை வலுவாக்கி வருங்காலத்தில் சிறப்பாக செயல்பட வைக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது பற்றி கௌதம் கம்பீர் பேசியது பின்வருமாறு. “அனைவருக்கும் பொறுப்பு இருக்கிறது. பேட்ஸ்மேன்கள் மட்டும் எங்களை கீழே விட்டார்கள் என்று நான் சொல்ல மாட்டேன். இந்த தோல்வி வலிக்கிறது என்று சொல்லி நான் மூடி மறைக்க விரும்பவில்லை”

- Advertisement -

இந்தியா முன்னேறும்:

“இது எங்களுக்கு வலிக்க வேண்டும். அந்த வலி தான் எங்களை இன்னும் சிறந்தவர்களாக மாற்றும். இந்த இடத்தில் இருப்பதில் என்ன தவறு? இது எங்களுடைய இளம் வீரர்களை இன்னும் சிறப்பாக முன்னேறுவதற்கு தள்ளும். கான்பூரில் வங்கதேசத்துக்கு எதிராக அற்புதமான வெற்றியை பெற்ற எங்களுக்கு இது போன்ற தோல்வியும் கிடைக்கலாம்”

இதையும் படிங்க: 3 ஆவது டெஸ்ட் ஹர்ஷித் ராணா அறிமுகமா வாய்ப்பே இல்ல.. காரணத்தை கூறிய – அபிஷேக் நாயர்

“நாங்கள் அதிலிருந்து முன்னோக்கி செல்ல வேண்டும். சர்வதேச கிரிக்கெட்டில் என்னுடைய வேலை எளிதாக இருக்கும் என்று எதிர்பார்த்து வரவில்லை. முதலில் இலங்கையிடம் தோற்ற நாங்கள் தற்போது நியூசிலாந்திடம் தோற்றுள்ளோம். ஆனால் தொடர்ந்து தயாராகி நாட்டுக்காக சிறந்த முறையில் விளையாட நாங்கள் முயற்சிக்க உள்ளோம். டி20 போட்டிகள் மற்றும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் வருகையால் இப்போதெல்லாம் டிராவை நம்மால் அதிகம் பார்க்க முடிவதில்லை. ஒவ்வொரு டெஸ்ட் போட்டியும் முக்கியமானது” என்று கூறினார்.

Advertisement