இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகள் முடிவடைந்த வேளையில் இந்திய அணியானது ஏற்கனவே 2 போட்டியிலும் தோல்வியை தழுவி இந்த தொடரை இழந்துவிட்டது. இதன் காரணமாக தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு செல்வதிலும் இந்திய அணிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ஹர்ஷித் ராணா அறிமுகம் கிடையாது :
இந்நிலையில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியானது நாளை நவம்பர் 1-ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக இரு அணி வீரர்களும் தற்போது மும்பை சென்று தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் இந்த மூன்றாவது போட்டியின் போது இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ராவிற்கு ஓய்வு அளிக்கப்பட்டு இரண்டாவது போட்டியில் வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பு அளித்தது போன்று தற்போது அறிமுக வீரராக ஹர்ஷித் ராணாவிற்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று கடந்த சில நாட்களாகவே தகவல்கள் வெளியாகி வந்தன.
இந்திய டெஸ்ட் அணியில் தொடர்ச்சியாக இடம் பிடித்து வரும் அவருக்கு இதுவரை அறிமுக வாய்ப்பு வழங்கப்படாததால் அவருக்கு இந்த வாய்ப்பு வழங்கப்படும் என்று பேசப்பட்டது. ஆனால் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஹர்ஷித் ராணா அறிமுகமாக வாய்ப்பே இல்லை என இந்திய அணியின் துணை பயிற்சியாளரான அபிஷேக் நாயர் சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.
இது குறித்து பேசிய அவருக்கு கூறுகையில் : இந்திய அணியில் யாரும் புதிதாக சேர்க்கப்படவில்லை. ஏனென்றால் ஒவ்வொரு நாளும் ஒரு வீரருக்கு முக்கியம். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டி குறித்து நாங்கள் அதிகமாக யோசிக்கவில்லை. அடுத்தடுத்து வரும் போட்டிகளில் மட்டும்தான் கவனம் செலுத்த இருக்கிறோம். அதேபோன்று மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஹர்ஷித் ராணா அறிமுகமாகவில்லை.
இதையும் படிங்க : 107க்கு ஆல் அவுட்.. ஆரம்பமே சொதப்பல்.. இளம் ஆஸி அணியிடம் சிக்கிய ருதுராஜ் இந்தியா ஏ அணி
ஏனெனில் சில நாட்களுக்கு முன்பாகவே அவர் அணியில் இருந்து விடுக்கப்பட்டு ரஞ்சி டிராபி சென்று விளையாடி வருகிறார் என அபிஷேக் சர்மா இந்த விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இருப்பினும் எதிர்வரும் ஆஸ்திரேலிய தொடருக்கான சுற்றுப்பயணத்தில் அவர் இந்திய அணியுடன் பயணிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.



