இனிமேல் இந்தியாவுக்கு தோனி, கோலி, ரோஹித் மாதிரி ஃபுல் டைம் கேப்டன்கள் கிடைக்க மாட்டாங்க.. கம்பீர் பேட்டி

Gautam Gambhir 5
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகிய 3 வகையான போட்டிகளுக்கு வெவ்வேறு கேப்டன்கள் தலைமை தாங்கும் வழக்கத்தை வெளிநாடுகள் ஆரம்பக் காலங்களிலேயே கொண்டு வந்தன. மறுபுறம் 2007 டி20 உலகக் கோப்பையை தோனி தலைமையில் இந்தியா வென்று சாதனை படைத்தது. அந்த சமயங்களில் தான் டி20 போட்டிகள் அதிகம் அறிமுகமாகி பிரபலமாகின.

அந்த சூழ்நிலையில் முதல் டி20 உலகக்கோப்பை வென்ற காரணத்தால் தோனியிடம் பிசிசிஐ நிரந்தரமாக கேப்டன்ஷிப் பொறுப்பை ஒப்படைத்தது. கூடவே ராகுல் டிராவிட் தலைமையில் 2007 உலகக் கோப்பையில் படுதோல்வியை சந்தித்த இந்தியாவின் டெஸ்ட் கேப்டன் ஜாம்பவான் அனில் கும்ப்ளே 2008இல் ஓய்வு பெற்றார். அதனால் அந்த 2 கேப்டன்ஷிப் பொறுப்புகளும் தோனியிடம் வந்தது.

- Advertisement -

தோனி, ரோஹித், கோலி:

அந்த 3 பொறுப்புகளையும் திறம்பட செய்த தோனி தலைமையில் 2010ஆம் ஆண்டு இந்தியா வரலாற்றில் முதல் முறையாக நம்பர் ஒன் டெஸ்ட் கிரிக்கெட் அணியாக முன்னேறி சாதனை படைத்தது. 2011 உலகக் கோப்பையை வென்ற இந்தியா சாம்பியன்ஸ் கோப்பையையும் முத்தமிட்டது. அதன் பின் டெஸ்ட் கிரிக்கெட்டில் சந்தித்த தொடர் தோல்விகளால் 2014இல் ஓய்வு பெற்ற தோனிக்கு பின் விராட் கோலி கேப்டனாக செயல்பட்டார்.

2017இல் ஒருநாள், டி20 கேப்டன்ஷிப் பொறுப்பையும் விராட் கோலியிடம் ஒப்படைத்த தோனி சாதாரண வீரராக விளையாடினார். 2021 வரை 3 வகையான அணிக்கும் கேப்டனாக செயல்பட்ட விராட் கோலி தலைமையில் இந்தியா ஐசிசி கோப்பையை வெல்லத் தவறியது. பின்னர் முழு நேர கேப்டனாக செயல்பட்ட ரோஹித் சர்மா 2 ஐசிசி கோப்பைகளை வென்று டெஸ்ட், டி20 கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றுள்ளார்.

- Advertisement -

ரொம்ப கஷ்டம்:

அதனால் தற்போது 3 வகையான கிரிக்கெட்டுக்கும் இந்தியா 3 வெவ்வேறு கேப்டன்களை (சூர்யகுமார், ரோஹித், கில்) கொண்டுள்ளது. இந்நிலையில் இனிமேல் தோனி, கோலி, ரோஹித் போல இந்தியாவுக்கு முழு நேர கேப்டன்கள் கிடைப்பது கடினம் என்று பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “3 வகையான கிரிக்கெட்டிலும் ஒரே கேப்டன் இருந்தால் பயிற்சியாளராக நீங்கள் வேலை செய்வது எளிதாக இருக்கும்”

இதையும் படிங்க: 42 முறை.. 2025 ஐபிஎல் வரலாற்று சாதனை.. கண்ணாடியை நொறுக்கிய அபிஷேக்.. ஆர்சிபியை விளாசிய ஹைதராபாத்

“ஆனால் இனிமேல் அது நிகழ்வது கடினம். ஏனெனில் இன்றைய நாளில் 12 மாதங்களும் ஒருவர் கேப்டனாக செயல்பட முடியாது. 10 மாதங்கள் சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியாவை தலைமைத் தாங்கக்கூடிய ஒருவர் ஐபிஎல் தொடரிலும் கேப்டனாக விளையாட வேண்டும். அப்படி ஒருவர் 12 மாதங்கள் கேப்டனாக செயல்படுவது மனதளவில் பெரிய பாதிப்பை உண்டாக்கும். எனவே இன்றைய நாள் மற்றும் வயதில் 2 கேப்டன்கள் இருப்பதே நல்லது. ஏனெனில் அழுத்தம் அவர்களுக்குள் பகிர்ந்து கொள்ளப்படும். கேப்டனாக இல்லாத போது மனதும் எளிதாகும்” என்று கூறினார்.

Advertisement